Viduthalai 2 movie: விடுதலை 2 படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் படம் விடுதலை 2. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தென்காசியில் இந்த படத்தின் சூட்டிங், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களை வைத்து விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடிக்க இணைந்துள்ளதாக தற்போது படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு நடிகர் விஜய் சேதுபதி சென்னை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை 2 படம்: இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து அதிரடி சரவெடியாக படங்களை கொடுத்து வருகிறார்/ அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் தற்போது நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் கேமியோ கேரக்டரில் இணைந்த விஜய் சேதுபதி தற்போது இரண்டாவது பாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட கேரக்டரில் நடித்து வருகிறார். வாத்தியார் கேரக்டரில் அவர் இந்த படத்தில் மாஸ் காட்டி வருகிறார். அவருக்கு முதல் பாகத்தில் ஜோடி இல்லாத சூழலில் தற்போது மஞ்சு வாரியர் இரண்டாவது பாகத்தில் ஜோடியாகியுள்ளார்.
விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம்: இந்த படத்தில் அவருக்கு ஃபிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாகவும் அதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன், படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அமெரிக்கா பயணமாக உள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாகவும் இதையடுத்து வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் இன்னும் மூன்று மாதங்களில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்காசியில் சூட்டிங்: தென்காசியில் விடுதலை 2 படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த சூழலில் நேற்றைய தினம் விஜய் சேதுபதி -ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் அவரது 51வது படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. படத்திற்கு ஏஸ் என்று பெயரிடப்பட்டுள்ள சூழலில் இதன் வெளியீட்டிற்காக நேற்றைய தினம் நடிகர் விஜய் சேதுபதி சென்னை வந்திருந்தார். விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அவர் சென்னை வந்துள்ள சூழலில் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சூட்டிங் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடந்ததாகவும் படத்தின் ஷூட்டிங் நடிகர் எஸ்ஜே சூர்யா இணைந்ததாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை 2 படத்தில் எஸ்ஜே சூர்யா: படத்தின் முதல் பாகத்தில் சூரி ஹீரோவாக நடித்த சூழலில் விஜய் சேதுபதி கேமியோ கேரக்டரில் இணைந்திருந்தார். இந்நிலையில் அவரது வாத்தியார் கேரக்டர் விரிவு படுத்தப்பட்டு இரண்டாவது பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இரண்டாவது பாகத்தில் எஸ்ஜே சூர்யா கேமியா கேரக்டரில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது கேரக்டரை வெற்றிமாறன் விரிவுபடுத்தி விடுதலை 3 படமாக உருவாக்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











