Actor Vikram: சியான் 62 படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா.. அட மாஸ் கூட்டணியா இருக்கே!

சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது நடிப்பில் சியான் 62 படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர். தங்கலான் படத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதையை பா ரஞ்சித் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள நிலையில் அவரது லுக் போஸ்டர்கள் மிரட்டலாக வெளியாகின.

இந்நிலையில் விக்ரமின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். சித்தா படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கிய சு அருண்குமார் இயக்கத்தில் தன்னுடைய சியான் 62 படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துவரும் இந்தப் படத்தை எச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியான நிலையில், படத்தில் கிராமத்து கெட்டப்பில் விக்ரமை பார்க்க முடிந்தது.

Actor SJ Surya joined in Vikrams Chiyaan 62 movie officially

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். என் காதல் கண்மணி என்ற படத்தில் இவரது திரைப்பயணம் துவங்கினாலும் இவருக்கு சேது படம் சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில், சேது படத்தை தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக் காட்டினார். ஒரு படத்திற்காக இவ்வளவு மெனக்கெட முடியுமா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

தங்கலான் படம்: இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை இந்தப் படம் பேசுவதாக அமைந்துள்ளது. படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவரது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், பல்வேறு பட விழாக்களை படம் சந்தித்து வருகிறது.

சியான் 62 படத்தில் எஸ்ஜே சூர்யா: இந்தப் படத்தை தொடர்ந்து சியான் 62 படம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு இறுதியில் விக்ரம் அறிவித்திருந்தார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள சு அருண்குமார் இயக்கத்தில் சியான் 62 படத்தில் நடிக்க விக்ரம் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்டவண்ணம் உள்ளனர். இதனிடையே படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்ரம் -எஸ்ஜே சூர்யா காம்பினேஷனில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரசிகர்கள் ஆர்வம்: முன்னதாக சியான் 62 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் விக்ரம் கிராமத்து லுக்கில் காணப்பட்ட நிலையில், நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் கிராமத்து கேரக்டரில் நடிக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசையும் மிகப்பெரிய வலிமையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மும்பைகார், தக்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ள எச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த நடிகர் நடிகைகளின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X