SJ Surya: மான்ஸ்டர்க்கு மேல மாநாடுக்கு கீழ.. பொம்மை குறித்து பேசிய எஸ்ஜே சூர்யா!
சென்னை: நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது பொம்மை படம். ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சைக்காலாஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது.

பொம்மை படம் குறித்து பேசிய எஸ்ஜே சூர்யா: நடிகர் எஸ்ஜே சூர்யா தமிழின் முக்கியமான நடிகராக மாறியுள்ளார். தொடர்ந்து விஜய், கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்து வருகிறார். சிறப்பான இயக்குநராக விஜய், அஜித் உள்ளிட்டவர்களை இயக்கியுள்ள எஸ்ஜே சூர்யா, தானும் ஹீரோவாக நடித்து பல படங்களை இயக்கி வெற்றிப் படைப்பாக மாற்றியுள்ளார். தற்போது வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்றைய தினம் இயக்குநர் ராதாமோகன் டைரக்ஷனில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் பொம்மை படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. உணர்வுபூர்வமான கதைக்களங்களை கொண்டு படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ராதாமோகன், இந்தப் படத்தில் முதல் முறையாக த்ரில்லர் கதையை கையில் எடுத்துள்ளார்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மட்டுமில்லாமல் பிஜிஎம்மும் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. மேலும் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரின் க்யூட்னசும் இணைந்துள்ளது. படத்தை பார்த்துவரும் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. படம் கண்டிப்பாக எஸ்ஜே சூர்யாவின் பெஸ்ட்டாக அமையும் என்று கமெண்ட்ஸ் எழுந்துள்ளன.
இறைவி, மாநாடு படங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா பின்னிவிட்டதாக ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கமெண்ட் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக பேசிய எஸ்ஜே சூர்யா, பொம்மை படம் தன்னுடைய மான்ஸ்டர் படத்திற்கு மேல் மாநாடு படத்திற்கு கிழ் என்று தெரிவித்துள்ளார். மாநாடு படத்தின் கதை சொல்லப்பட்ட போது தனக்கு மிரட்சியை தந்ததாகவும், ஆனால் பொம்மை படம் அந்த அளவிற்கு கமர்ஷில் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

படத்தில் ராஜகுமாரன் கேரக்டரின் காதலை வைத்து இயக்குநர் அந்த உணர்வை கொண்டு நூல் பிடித்து சென்றுள்ளதாகவும் அது வொர்க் அவுட் ஆனால், ஒரு 96, காந்தாரா, திருச்சிற்றம்பலம் போல இந்தப் படமும் மேஜிக் செய்யும் என்றும் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், பொம்மைக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











