நடிப்பு அசுரன் எஸ் ஜே சூர்யா.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிப்பு அசுரன் என பெயர் எடுத்த எஸ் ஜே சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வாரம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

actor sj surya salary for jigarthanda double x movie

இந்த படம் வெளியாகி ஒரு வாரமான நிலையில், உலகளவில் இத்திரைப்படம் ரூ.45 கோடியை வசூலித்துள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சக்சஸ் மீட்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜே. சூர்யா, இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர், சிவாஜியை விட ஜாம்பவனாக இருந்த நடிகவேள் ஐய்யா அவருடன் என்னை ஒப்பிட்டு பேசியது இந்த பிறவியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் பார்க்கிறேன். அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதில் இருந்து வந்துள்ளது.

அனைவருக்கும் நன்றி: இந்த படத்தில் என்னுடன் ஸ்கிரீன் ஸ்பேஸை பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ்க்கு என்னுடைய நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இறைவி படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார். அதேபோல, இந்த படத்தில் என்னை ஒரு நல்ல நடிகராக அடையாளப்படுத்தி உள்ளார். அதற்கு எனது மனமார்த்த நன்றி என்றார்.

எஸ் ஜே சூர்யா சம்பளம்: இத்திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் விஷாலை விட, இவரின் நடிப்பு பேசும்படியாக இருந்தது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் இப்படத்திற்காக ரூபாய் 5 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X