பாதியில் நின்றுபோன உயர்ந்த மனிதன்.. கடவுள் கொடுத்த தண்டனையா? மனம் வருந்திய எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள 'ராயன்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யா படம் குறித்து பல விஷயத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்போது அவர் பாதியில் நின்று போன உயர்ந்த மனிதன் படம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

தனுஷின் ராயன் திரைப்படம் 26ஆம் தேதி வெளியான உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச்சாகி உள்ளது.

Raayan Dhanush SJ Surya

நடிகர் எஸ்.ஜே.சூர்யா: இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் படம் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார். ராயன் படத்திற்கு ஒரு நாள்தான் டப்பிங் பேசினேன். எனக்கான காட்சிகள் பெரும்பாலும் முக பாவனைகளில் மட்டுமே இருக்கும். ராயபுரத்தின் ஓநாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நேரடியாக எதையும் செய்ய மாட்டேன். ஆனால் மறைமுகமாக எல்லாப் பிரச்சனைகளையும் செயல்படுத்தும் கதாபாத்திரம் அது என்றார்.

மிகவும் கஷ்டப்பட்டேன்: இதையடுத்து, உயர்ந்த மனிதன் திரைப்படம் எப்போது என்ற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா, அந்த படத்திற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன், அந்த படத்திற்காக இயக்குநருடன் பல டிஸ்கசன் செய்து, படப்பிடிப்பில் வேலை பார்த்தேன். ஆனால், கொரோனாவால் படப்பிடிப்பு நின்று விட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய போதும், சட்ட சிக்கலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கடவுள் கொடுத்த தண்டனையா: கடவுள் ஏன் இந்த மாதிரி ஒரு கஷ்டத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை, ஆனால், ஏதோ காரணத்திற்காகத்தான் இந்த படம் தடை பட்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தற்போது நான் கில்லர் என்று ஒரு படத்தை எடுக்க இருக்கிறேன். இந்த படம் உயர்ந்த ஒரு இடத்திற்கு சென்ற மிகு உயர்ந்த மனிதன் படத்தை எடுப்பேன் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அது நடக்கும் அந்த படத்தில் நடிக்காமல், அமிதாப் சார் நிச்சயமாக இந்த உலகத்தை விட்டு போகமாட்டார் என்று எஸ்.ஜே.சூர்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

நிறுத்தப்பட்டது: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா இருவரும் இணைந்து 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்த வந்தனர். மச்சக்காரன், கள்வனின் காதலி ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் இப்படத்தை இயக்கி வந்தார். அமிதாப் பச்சன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படமாக உருவாகிய இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு தரப்புக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'உயர்ந்த மனிதன்' படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X