Actor SJ Surya: கிட்னியை பறிகொடுத்துடாதீங்க.. வடிவேலு காமெடியை வைத்து நானியை கலாய்த்த எஸ்ஜே சூர்யா!

சென்னை: நடிகர் நானியின் சூர்யாஸ் சாட்டர்டே படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிகளில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் நானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் இணைந்து தமிழில் இந்த படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டனர். பேட்டிகளில் பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்துள்ளனர். ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த பேட்டிகள் அமைந்துள்ளன. வடிவேலு காமெடியை சொல்லி நானியை எஸ்ஜே சூர்யா கலாய்த்ததை பார்க்க முடிந்தது.

SJ Surya Nani

சூர்யாஸ் சாட்டர்டே படம்: நடிகர் நானியின் 31வது படமாக உருவாகியுள்ளது சூர்யாஸ் சாட்டர்டே. ஹாய் நானா படத்தை தொடர்ந்து நானியின் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இன்னும் சில தினங்களில் வரும் 29ம் தேதி இந்தப் படம் இந்திய அளவில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து படத்தின் பிரமோஷன்களில் நானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் அதிரடி வில்லனாக எஸ்ஜே சூர்யா களமிறங்கியுள்ளார். முன்னதாக வெளியான படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றில் அவரது மிரட்டலான வில்லத்தனம் வெளிப்பட்டுள்ளது.

நடிகர் நானி: படத்தில் நானிக்கு ஜோடியாகியுள்ளார் பிரியங்கா மோகன். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நானி. அந்த வகையில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் சூர்யாஸ் சாட்டர்டே படம் உருவாகியுள்ளது. படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். ராயன் படத்தில் வழக்கமான கதைக்களத்தில் இருந்து விலகி சிறப்பான கதையை தனுஷ் கொடுத்துள்ளதுபோல விவேக் ஆத்ரேயாவும் சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் அதே முயற்சியை மேற்கொண்டுள்ளதாக நடிகர் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார். தனக்கு கடவுள் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநருக்கு பாராட்டு: இந்தப் படத்தை தான் பணத்திற்காக மட்டுமே ஒப்புக் கொள்ளவில்லை என்றும் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார். ராயன் படத்தை போலவே சூர்யாஸ் சாட்டர்டே படமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்றும் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார். படத்தின் கதை வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆக்ஷன் படங்களின் முன்னோடி ரஜினிகாந்தின் பாட்ஷா படம்தான் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனிடையே நானி, பிரியங்கா மோகன் ஆகியோருடன் இணைந்து தமிழ் ரசிகர்களுக்காக பேசிய எஸ்ஜே சூர்யா, வடிவேலு காமெடியை வைத்து அவரை கலாய்த்துள்ளார்.

கிட்னியை பறிகொடுத்துடாதீங்க: நானியை பாட்டுப்பாட சொல்லி ஆங்கர் கேட்க, வடிவேலு காமெடியை வைத்து உசுப்பேற்றுவார்கள், இதற்கு யோசித்து கிட்னியை இழந்து விடாதீர்கள் என்று எஸ்ஜே சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். கிட்னியை பறிகொடுத்தவன் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய ஸ்டாரான நானியை, மரியாதையாக கூட்டிவந்து மரியாதையாக அனுப்பி வைக்க வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்றும் எஸ்ஜே சூர்யா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X