SJ Suryah: சூப்பராதான் இருக்கு.. உலகநாயகனுக்கு வில்லனாக மிரட்டும் எஸ்ஜே சூர்யா!

சென்னை: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யா.

அடுத்ததாக இவரது நடிப்பில் விஷால் லீட் கேரக்டரில் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் என ஷங்கரின் ஹீரோக்களுடனும் மல்லுக்கட்டி வருகிறார் எஸ்ஜே சூர்யா.

Actor SJ Suryah Revealed happiness about the movies he acting

அடுத்தடுத்த படங்கள் குறித்து நடிகர் எஸ்ஜே சூர்யா உற்சாகம்: நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் அதிகமான ஆர்வம் இருந்தபோதிலும் இயக்குநராகத்தான் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கினார். அஜித், விஜய் என அடுத்தத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். வாலி, குஷி என இந்தப் படங்கள் அஜித்திற்கும் விஜய்க்கும் கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து தானே ஹீரோவாக மாறினார் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து இந்தவகையில் அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் முழு நேர நடிகராகவே மாறியுள்ளார். இவரை இயக்குநராக மீண்டும் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும் முக்கியமான நடிகராக மாறியுள்ளார் எஸ்ஜே சூர்யா. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக வரும் 15ம் தேதி அவரது நடிப்பில் வெளியாகவுள்ளது விஷாலின் மார்க் ஆண்டனி படம். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் எஸ்ஜே சூர்யா தற்போது தனது பேட்டியொன்றில் பேசியுள்ளார். மேலும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளது குறித்தும் உறுதிப்படுத்தியுள்ளார். ஷங்கரின் இந்தியன் 2 படம் கேம் சேஞ்சர் படங்களில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா, விஷால் படத்திலும் இணைந்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள எஸ்ஜே சூர்யா, சூப்பராத்தான் இருக்கு என்று உற்சாகத்துடன் பதிலளித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகியுள்ளார் எஸ்ஜே சூர்யா. இந்த காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேபோல மார்க் ஆண்டனி படத்திலும் எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் இருவரும் இருவேறு கெட்டப்புகளில் காணப்படுகின்றனர். டைம் ட்ராவலை மையமாக கொண்ட இந்தப் படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, முன்னதாக சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து நடிப்பில் கலக்கலான பர்பார்மென்சை கொடுத்து வருகிறார். இவருக்கு தென்னிந்திய அளவில் அதிகமான டிமாண்ட் காணப்படுகிறது. இதனால் இவரை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X