என்னை நடிகவேளுடன் ஒப்பிட்ட ரஜினி..ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி விழாவில் நெகிழ்ந்த எஸ் ஜே சூர்யா!
சென்னை: என்னை நடிகவேலுவுடன் ஒப்பிட்டு ரஜினிகாந்த் பாராட்டியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி விழாவில் எஸ் ஜே சூர்யா பேசி உள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியானது.

முதல் நாளில் ரூ.2.96 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.21 கோடி வசூலை அள்ளிய இத்திரைப்படம், ஒரு வாரத்தில் உலகளவில் ரூ.45 கோடி வசூலானது. இதனால், தயாரிப்புக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: இதையடுத்து, ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எஸ்.ஜே சூர்யா,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது, உண்மையில் இந்த திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் குறிஞ்சி மலர் போன்று அறிய படைப்பு. இந்த படத்தை மக்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மிகப்பெரிய பாராட்டு: குறிப்பாக இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை குறிஞ்சி மலர் என பாராட்டி உள்ளார். அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர், சிவாஜியை விட ஜாம்பவனாக இருந்தவர் நடிகவேல் ஐய்யா அவருடன் ரஜினி என்னை சேர்த்து பேசியது என்பது இந்த பிறவியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் பார்க்கிறேன். அவர் எழுதிய கடிதம் மக்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச்சாகி உள்ளது.
நெகிழ்ந்த எஸ்.ஜே சூர்யா: மேலும், நான் அடுத்ததாக கில்லர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிப்பதற்கு தலைவர் அவர்கள் வாழ்த்து ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது. அவருடைய வார்த்தைக்கள் ஒவ்வொன்றும் மனதில் இருந்து வந்துள்ளது. இந்த படத்தில் தன்னுடன் ஸ்கிரீன் ஸ்பேஸை பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ்க்கு தன்னுடைய நன்றி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் ரசிப்பு திறன் உயர்ந்திருப்பதாகவே தான் பார்ப்பதாகவும் எஸ்.ஜே சூர்யா வெற்றிவிழாவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











