சர்தார் 2.. கார்த்தி எத்தனை மணி நேரம் மேக்கப் போட்டார் தெரியுமா? நெகிழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!
சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் சர்தார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சர்தார் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இப்படத்தில், மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, சர்தார் 2 படத்தின் கதையை மித்ரன் என்னிடம் சொன்னதுமே, நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடிக்கும் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கிய விதம், சர்தார் படத்தின் கோள், இந்த திரைப்படத்திற்காக அவர் எடுத்த முயற்சி என அனைத்தும் சேர்ந்து ஒரு அழகான படமாக உருவாகி இருக்கிறது.

சர்தார் 2: ஹாலிவுட்டில் வரும் ஸ்பை படத்தை, நம்ம ஊரு மக்களுக்கும் புரியும் வகையிலும், என்டர்டைன்மெண்ட் செய்யும் வகையிலும் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பல நல்ல இயக்குனர்கள் நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுக்கிறார்கள். நானும் அவர்கள் சொல்வது போல நடித்துக் கொடுக்கிறேன். இப்படத்தில் நான் மிகவும் என்ஜாய் பண்ணி நடித்திருக்கிறேன். நிச்சயமாக இப்படமாக ஒரு நல்ல வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், நான் தயாரிப்பாளரிடம் படத்தை இந்தியில் நேரடியாக வெளியிடுங்கள் என்று ஒரு வேண்டுகோளையும் வைத்து இருக்கிறேன். இப்படம் பான் இந்திய அளவில் வெளியாகி வெற்றிப்பெற்ற படங்களின் வரிசையில் நிற்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இரண்டு மணி நேரம் மேக்கப்: இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது, தயாரிப்பாளர், நடிகர் கார்த்தி, படத்தின் இயக்குனர் மித்ரன் தான். இவர்கள் மூன்று பேர் தான். இவர்கள் கலையை நேசித்து ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்ததால், இந்த படம் ஒரு நல்ல படமாகவே வந்திருக்கிறது. இவர்களுடன் பணியாற்றியதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்டார் நடிகரான கார்த்திக் இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார். அவருக்கு மேக்கப் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும், அதை எடுப்பதற்கு 45 நிமிஷமாகும் அந்த அளவிற்கு அவர் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications