ரியல் ஹீரோ சோனு சூட்.. 47வது பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் தெறிக்கும் வாழ்த்துக்கள்!
மும்பை: உதவி தேவைப்படுகிறது என கேட்பவர்களுக்கும், நினைப்பவர்களுக்கும் தானாக முன்வந்து பல நல்ல உதவிகளை செய்து படங்களில் வில்லனாகவும், நிஜத்தில் சூப்பர் ஹீரோவாகவும் இருப்பவர் நடிகர் சோனு சூட்.
Recommended Video
தமிழ் திரைப் படங்களில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட சோனு சூட் தற்பொழுது பல மொழிகளில் பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்.
இவ்வாறு படங்களிலும் நிஜத்திலும் மக்களின் மனதில் சூப்பர் ஹீரோவாக இருந்து வரும் சோனு சூட் ஜூலை 30 ஆம் தேதியான இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே
பல படங்களில் நமக்கு வில்லனாக பரிச்சயமான சோனு சூட் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் நிஜத்தில் ஒரு சூப்பர் ஹீரோ. கள்ளழகர், நெஞ்சினிலே, சந்தித்தவேளை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்த சோனு சூட்க்கு 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அனைவரையும் மிரட்டி
நடிகை அனுஷ்கா ஷெட்டி முதன் முதலில் மிரட்டும் கதாபாத்திரத்தில் லீட் ரோலில் நடித்திருந்த அருந்ததி படத்தில் சோனு சூட் கொடூரமான வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி எடுத்திருந்தார். தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட அருந்ததி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பல்வேறு விருதுகளை வென்று வந்ததுடன் பல வசூல் சாதனைகளையும் புரிந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.

மறக்கமுடியாத கதாபாத்திரம்
இவ்வாறு பல படங்களில் சோனு சூட் நடித்திருந்தாலும் அருந்ததி கொடுத்த அறிமுகம் இன்றுவரை மக்களால் மறக்கமுடியாத கதாபாத்திரமாக திகழ்ந்து வருகிறது. அதற்குப் பிறகு தமிழில் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த நடிகராக விளங்கி வந்தார்.

சூப்பர் ஹீரோ
இந்நிலையில் சமீபகாலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா நோய்த்தொற்று பரவலின் காரணமாக பல்வேறு புலம்பெயர் மக்கள் ஆங்காங்கே வேலை செய்ய சென்ற இடத்தில் தவித்து வந்த நிலையில் சோனு சூட் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த செலவில் பல பேருந்துகளை இயக்கி அனைவரையும் தங்களது சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் செல்ல உதவியாக இருந்தது பலராலும் பாராட்டப்பட்டதோடு மக்கள் மனதில் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தார்.

சொந்த வாழ்க்கையில்
இவ்வாறு சொந்த வாழ்க்கையில் மக்களுக்காக பல சேவைகளை புரிந்து வரும் சோனு சூட் ரீலில் வில்லனாகவும் ரியலில் ஹீரோவாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் வறுமையால் தவித்த ஒரு விவசாய குடும்பத்திற்கு சமீபத்தில் டிராக்டர் வண்டியையும், கொரோனாவால் ஐடியில் வேலை இழந்து தவித்து வந்த பெண்ணுக்கு வேலை கொடுத்தும் இவர் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள்
ஜூலை 30 ஆம் தேதியான இன்று இவர் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில், இவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் "ரியல் ஹீரோவுக்கு பிறந்தநாள்" எனக் கூறி இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











