படையப்பா ரஜினி எல்லாம் ஓரம் போங்க.. பாம்பை அசால்ட்டாக கையில் பிடித்து கிளாஸ் எடுக்கும் சோனு சூட்!

மும்பை: இந்தியத் திரையுலகில் நடிகர் அதுவும் வில்லன் நடிகர், தயாரிப்பாளர், விளம்பர மாடல் மற்றும் மனிதநேய செயல்கள் மூலம் பிரபலமானவர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பெரும்பாலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், படத்தில் தான் வில்லன் நிஜ வாழ்க்கையில் தான் ஒரு ஹீரோ என அவரது மனிதாபிமான செயல்கள் எடுத்துச் சொல்கின்றன. இந்நிலையில் அவரது பண்ணை வீட்டுக்குள் வந்த பாம்பை, அவரே அசால்ட்டாக கையில் பிடித்து அதை காட்டுக்குள் விட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சோனு சூட்டின் திரையுலகப் பயணம் 1999ஆம் ஆண்டு தொடங்கியது. இவர் முதன் முதலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் கள்ளழகர் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதே ஆண்டில், விஜய்யின் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சந்தித்த வேளை, மஜ்னு, கோவில்பட்டி வீரலட்சுமி, ராஜா, ஒஸ்தி, அருந்ததி போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். விஜயகாந்த் சார் தான் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர். அவருக்கு தான் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று பலமுறை கூறியுள்ளார். ஃபதே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.

Actor Sonu Sood Handle Real Snake Which Is Comes His Home Video Goes Trending
Photo Credit:

நிஜ வாழ்க்கையில் ஹீரோ: சோனு சூட் உலக அளவில் புகழ் பெறுவதற்கு முக்கிய காரணம், 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் செய்த மனிதாபிமான உதவிகளே. ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிரமப்படும் போது, அவர்களுக்கு பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் பயண ஏற்பாடுகளை செய்து உதவினார். குறிப்பாக, கேரளாவில் சிக்கியிருந்த ஒடிசா மாநில தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது பெரும் பாராட்டைப் பெற்றது. அதுமட்டுமின்றி, மருத்துவ உதவி, கல்விக்காக உதவிகள், விவசாயிகளுக்கு டிராக்டர் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதனால் அவர் "நிஜ வாழ்க்கை ஹீரோ" என்று பலராலும் புகழப்படுகிறார். மேலும், தெலங்கானாவில் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டி சிலை வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பாம்பு: இப்படி இருக்கும்போது சோனு சூட்டின் பண்ணை வீட்டுக்குள் நுழைந்த பாம்பினை அவரே அசால்ட்டாக கையில் பிடித்து அதை காட்டுப் பகுதிக்குள் விடும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் அதற்கு ஹர ஹர மகா தேவ் என கேப்ஷன் இட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில், பாம்புகளைப் போன்ற வாயில்லா ஜீவன்களிடம் எப்போதும் கவனமாக இருங்கள். இந்த பாம்பு விஷமற்ற பாம்பு.

பாராட்டுகள்: உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் கூட அதை காயப்படுத்த வேண்டாம். பாம்புகளைப் பிடிப்பவர்களை அழைத்து அதனை பிடித்து காட்டுப் பகுதிக்குள் விடச் சொல்லுங்கள் எனக் கூறுகிறார். மேலும் பாம்பைப் பிடித்து ஒரு பையில் போட்ட சோனு சூட் அதை காட்டுக்குள் விட்டுவிடுமாறு தன்னிடம் வேலை செய்யும் பணியாட்களிடம் கூறுகிறார். இந்த வீடியோவப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும் சோனு சூட் எவ்வளவு இரக்க குணம் கொண்டவராக உள்ளார் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X