விளாசி தள்ளிய சாம்னா.. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்தார் நடிகர் சோனு சூட்!
சென்னை: சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர் கடுமையாக விமர்சித்த நிலையில் நடிகர் சோனு சூட், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான நடிகர் சோனு சூட், அருந்ததி, தேவி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நிலவும் லாக்டவுன் நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி வருகிறார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதிகளை செய்து வருகிறார். அவரது இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை சூப்பர் மேனாக சித்தரித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சஞ்சய் ராவத் விமர்சனம்
நடிகர் சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி டிவிட்டரில் உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கும் தேவையான உதவியை செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சோனு சூட் குறித்து சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்தார்.

சோனு சூட் புதிய மகாத்மா
சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சோனுவை விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார் சஞ்சய் ராவத். அதில், லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊரில் கொண்டு சேர்த்த நடிகர் சோனு சூட் புதிய மகாத்மா என்றும் விமர்சித்ததோடு அவரை பாராட்டிய அம்மாநில கவர்னரையும் விளாசியது அந்த பத்திரிக்கை.

பின்னால் பாஜக
மேலும் நடிகர் சோனு சூட்டை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாகவும், எந்த கட்சி பணம் கொடுத்தாலும் சோனு சூட் நன்றாக புரமோட் செய்வார் என்றும் கூறியிருந்தது. மகராஷ்டிரா அரசை போல், எந்த மாநில அரசும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வில்லை என்றும் சாடியிருந்தது சாம்னா.

ஆதித்யா தாக்ரே டிவிட்
இந்நிலையில் நடிகர் சோனு சூட், மகாராஷ்டிர முதல்வர் உத்தரவ் தாக்ரேவை, அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். இதுகுறித்து உத்தவ் தாக்ரேவின் மகனான ஆதித்ய தாக்ரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதாவது. இன்று மாலை சோனு சூட் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சர் அஸ்லம் ஷேக் மற்றும் என்னை சந்தித்தார். ஒன்றாகச் சேர்ந்து, பல நபர்களுக்கு உதவ பலரும் ஒன்றாக இருக்கிறார்கள். மக்களுக்காக இணைந்து பணியாற்ற ஒரு நல்ல ஆத்மாவை சந்தித்திருப்பது நல்லது, "என்று தெரிவித்துள்ளார்.

ஆதரவளிக்கிறார்கள்
உத்தவ் தாக்ரே உடனான சந்திப்புக்கு பிறகு, நடிகர் சோனு சூட் தனது டிவிட்டர் பக்கத்தில் நாடு முழுக்க அனைத்து கட்சிகளும் தன்னை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவர்களும் அதை ஆதரிக்கிறார்கள். அது எந்தவொரு குறிப்பிட்ட கட்சி அல்லது எதையும் பற்றியது அல்ல... துன்பப்படும் அனைத்து மக்களையும் நாம் ஆதரிக்க வேண்டும்... காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒவ்வொரு கட்சியும் எனக்கு ஆதரவளித்துள்ளன..." என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்வேன்
மேலும் கடந்த 2 மாதங்களாக உதவி வரும் சோனு சூட், "எனது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடனான எனது பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது இதயத்திலிருந்து நேராக வருகிறது. காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை யாராவது என்னை அடைய முயற்சித்த போதெல்லாம், அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைக்க நான் எனது எல்லா முயற்சிகளையும் செய்துள்ளேன். தொடர்ந்து அவ்வாறு செய்வேன, "என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்

கண்டுபிடித்துவிட்டார்
மேலும் அரசுடனான கருத்து வேறுபாட்டையும் நடிகர் சோனு சூட் மறுத்துள்ளார். இதனிடையே இந்த சந்திப்பு குறித்து டிவிட்டிய அக்கட்சியின் எம்பியான சஞ்சய் ராவத், கடைசியாக சோனு சூட் மகாராஷ்டிரா முதல்வரின் அட்ரஸை கண்டுப்பிடித்துவிட்டார். அவர் மாதோஸ்ரீ இல்லத்தை அடைந்துவிட்டார்.. ஜெய் மகாராஷ்டிரா என மராத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











