மதுக்கடைக்கு போக உதவி கேட்ட இளைஞர்.. பிரபல நடிகரின் அட்டகாச பதில்.. குதூகலிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: வித்தியாசமான உதவிக் கேட்ட இளைஞருக்கு பிரபல நடிகர் சோனு சூட் அட்டகாச பதில் கொடுத்துள்ளார்.
Recommended Video
நடிகர் சோனு சூட், அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்திலேயே நடித்துள்ளார் சோனு சூட்.
இந்நிலையில் கொரோனாவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி செய்து வருகிறார்.

பலரும் பாராட்டு
அவரது இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை சூப்பர் மேனாக சித்தரித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி டிவிட்டரில் உதவி கேட்டு வருகின்றனர்.

இளைஞர் டிவிட்
டிவிட்டரில் உதவி கேட்பவர்களுக்கும் மறுக்காமல் மின்னல் வேகத்தில் உதவி வருகிறார் சோனு சூட். இந்நிலையில் நேற்று இளைஞர் ஒருவர் சோனு சூட்டிடம் வித்தியாசமான ஒரு உதவியை கேட்டுள்ளார். அதாவது லாக்டவுன் நேரத்தில் தான் மதுக்கடைக்கு போக உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

அல்டிமேட் பதில்
இது தொடர்பாக அவர் இந்தியில் பதிவிட்டுள்ள டிவிட்டில் சோனு பாய், நான் வீட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். நான் மதுகடைக்கு போக உதவி செய்யுங்கள் என கூறியுள்ளார். அதனை பார்த்த நடிகர் சோனு சூட், சகோ மதுக்கடையில் இருந்து வீட்டில் கொண்டு சேர்க்கதான் என்னால் உதவ முடியும். அப்படி உதவி தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.. என தெரிவித்துள்ளார்.

குவியும் லைக்ஸ்
அவரது இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள், அல்ட்டிமேட் ரிப்ளை என்றும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும் பாராட்டி வருகின்றனர். மேலும் சோனு சூட்டின் இந்த பதிவை 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோல் லைக் செய்துள்ளார் 4500க்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர்.

ஹோட்டல் திறப்பு
சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவு மற்றும் பேருந்து வசதிகளை செய்து தருவதோடு மட்டுமின்றி, ஜூஹு பகுதியில் உள்ள தனது ஹோட்டலையும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்காக திறந்து வைத்துள்ளார். பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலரும் கொரோனா நேரத்தில் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











