கொரோனா தொற்று பாசிடிவ்...தனிமைப்படுத்திக் கொண்ட சோனு சூட்
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்புகளும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விறுவிறுப்பாக நடந்து வந்த பல படங்களின் படப்பிடிப்புக்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்படும் பிரபலங்கள்
பாலிவுட்டில் அமீர்கான், அக்ஷய் குமார், ஷாருக்கான் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் தன்னை தானே தனிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோனு சூட்டிற்கு கொரோனா
அந்த பதிவில், வணக்கம் நண்பர்களே, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனவே என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். கவலைப்பட ஒன்றிமில்லை, மாறாக முன்பை விட உங்கள் சிரமங்களை சரி செய்ய இப்போது எனக்கு அதிகம் நேரம் கிடைத்துள்ளது. நினைவில் கொள்ளுங்கள், எந்த பிரச்சனையிலும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ
சோனு சூட் கொரோனா மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பல புலம்பெயர்ந்த தொழிலாளரகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு உதவி செய்து அனைவரது மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதனால் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள் ரியல் ஹீரோ என ரசிகர்கள் பலர் அவரை அழைத்து வருகின்றனர்.

பல மொழிகளில் வில்லன்
குஜராத் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் தூதராக சமீபத்தில் சோனு சூட் நியமிக்கப்பட்டார். 1999 ம் ஆண்டு நடிக்க வந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











