twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!

    By
    |

    சென்னை: நடிகர் சோனு சூட் தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணி தைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    சோனு சூட் ‘டெய்லர்’ கடை.. குறும்பாக மாறி… ஒரு குட்டி வீடியோ..!

    கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் சோனு சூட்.

    திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்! திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!

    பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

    பெரிய மனது

    பெரிய மனது

    வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்துள்ளார். இதையடுத்து அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்தாலும் நீங்கள்தான் ரியல் ஹீரோ என்றும் கொரோனா கால ஹீரோ என்றும் உங்கள் மனது பெரிது என்றும் கூறுகின்றனர்.

    தொடர்ந்து உதவி

    தொடர்ந்து உதவி

    இதற்கிடையே, வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் உதவிகள் செய்தும் வருகிறார். அவருக்கான பாராட்டு மழை தொடர்கிறது. அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும்
    உதவிகளைப் பாராட்டி தெலங்கானாவில் அவருக்குக் கோயில் கட்டியுள்ளனர்.

    ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    தெலுங்கில் 'ஆச்சார்யா' படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் சிலர், குழந்தைகளின் கல்விக்காக, ஸ்மார்ட்போன் வாங்க வசதியில்லாமல் இருப்பது சோனு சூட்டுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 100 தொழிலாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அவர் வாங்கிக் கொடுத்தார்

    தையல் இயந்திரம்

    இந்நிலையில், அவர் இப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படப்பிடிப்பு இடைவேளையில், துணி ஒன்றை தையல் இயந்திரத்தில் அமர்ந்து தைக்கிறார் அவர். இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் ஜாலியாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

    தையல் கடை

    தையல் கடை

    இதற்கு கேப்ஷனாக, 'சோனு சூட் தையல் கடை. இங்கே இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும். ஆனால், அது அரை கால் சட்டையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது' என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Sonu Sood shared a video on Twitter in which he announced that he is opening a tailor shop where he will offer free services.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X