twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏழைகளை ஏமாத்துனா…அவன புடுச்சி ஜெயில்ல போடுங்க… சோனுசூட் எச்சரிக்கை !

    |

    சென்னை : சோனுசூட் பெயரை முறைகேடாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய வந்த நபரை தெலுங்கான போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாலிவுட் நடிகரான சோனுசூட் தமிழில் மஜ்னு, ஓஸ்தி,சந்திரமுகி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    படத்தில் வில்லாக இருக்கும் இவர், நிஜயத்தில் ஹீரோவாக இருக்கிறார். இவர் சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளை அளித்துள்ளன.

    பேருதவி செய்தார்

    பேருதவி செய்தார்

    கொரோனாவின் தாக்கத்தால், கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே அவர் அவர் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் சோனு சூட்.

    மாணவர்களுக்கு உதவினார்

    மாணவர்களுக்கு உதவினார்

    அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும் உதவி என்று கோரிக்கை வைத்த அனைவருக்கும் தயங்காது உதவி செய்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தார்.

    ஒருவர் கைது

    ஒருவர் கைது

    இதனிடையே, சோனு சூட்டின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்தது. அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தெலங்கானா காவல் துறை ஒருவரை கைது செய்துள்ளது.

    ஏமாற்றுவதை நிறுத்துங்கள்

    ஏமாற்றுவதை நிறுத்துங்கள்

    சோனிசூட் தனது ட்விட்டர் பக்கத்தில், கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை பதிவிட்டு, உதவி நாடுபவர்களை ஏமாற்றும் இது போன்ற குற்றவாளிகளை கண்டறிய உதவிய தெலங்கானா காவல்துறைக்கு நன்றி. இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் உடனடியாக அதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் நீங்கள் விரைவில் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நிற்க வேண்டிய வரும், ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Actor Sonu Sood tweeted gratitude to Telangana police
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X