அவர்கள் மரணத்தில் எனக்கு தொடர்பா.. மீடியாக்களை கெட்ட வார்த்தையால் திட்டி பிரபல நடிகர் ஆவேசம்!

மும்பை: சுஷாந்த் சிங் மற்றும் திஷா சாலியன் மரணத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறும் மீடியாக்களை கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்திருக்கிறார் பிரபல நடிகரான சூரஞ் பஞ்சோலி.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது மேனேஜர் மரண வழக்கில் நாள்தோறும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சுஷாந்தின் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது மேனேஜரான திஷா சாலியன் மரணத்திலும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி அதிகாலை திஷா, அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சூரஜ் பஞ்சோலி தொடர்பு?

சூரஜ் பஞ்சோலி தொடர்பு?

திஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடம்பில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே திஷாவின் வயிற்றில் சூரஜ் பஞ்சோலியின் குழந்தை வளர்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் திஷா மரணத்திற்கும் சூரஜ்க்கும் தொடர்பு இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடுப்பான சூரஜ்

கடுப்பான சூரஜ்

இதனால் சுஷாந்த், திஷா மரண வழக்கில் சூரஜின் பெயர் அடிப்பட்டு வருகிறது. சில மீடியாக்களும் இந்த வழக்கில் சூரஜ்க்கு தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில போட்டோக்களை வெளியிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனால் கடுப்பாகியுள்ள சூரஜ், இந்த வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி செய்தி வெளியிடும் மீடியாக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஃபேக் மீடியா

ஃபேக் மீடியா

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக கெட்ட வார்த்தையில் திட்டி தீர்த்து பதிவிட்டுள்ளார். தன்னுடைய போட்டோவை வெளியிட்ட டிவி சேனலின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள சூரஜ், ஃபேக் மீடியா என்றும் இதெல்லாம் நம்ப தகுந்த ஊடகமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிறுத்துங்கள்..

நிறுத்துங்கள்..

மேலும் 2016 ஆம் ஆண்டில் கிளிக் செய்யப்பட்ட இந்த போட்டோவில் உள்ள அந்த பெண் "திஷா சாலியன்" அல்ல, அது என் தோழி அனுஷ்ரி கவுர், அவர் இப்போது இந்தியாவில் கூட வசிக்கவில்லை.. தயவுசெய்து மக்களை மூளைச் சலவை செய்வதை நிறுத்துங்கள், என்னைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள், என்னை இதற்குள் இழுத்துச் செல்வதை நிறுத்துங்கள்!

திஷாவை பார்த்ததில்லை

திஷாவை பார்த்ததில்லை

உங்களின ஒவ்வொரு செயலும் ஒருவரின் வாழ்க்கையை அழிக்கக்கூடும் என்பதால் உங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்கத் தொடங்குங்கள்! இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன் "நான் என் வாழ்க்கையில் திஷா சாலியனை ஒருபோதும் சந்தித்ததும் இல்லை பேசியதும் இல்லை" என்று குறிப்பிட்டு மோசமான வார்த்தையால் ஃபேக் மீடியா என குறிப்பிட்டுள்ளார்.

அமைதியாக இருங்கள்

அமைதியாக இருங்கள்

அவரது இந்த பதிவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் பலரும், நீங்கள் ஸ்ட்ராங்காக இருங்கள், அமைதியாக உண்மை வெளியே வரும். இதுபோன்று பேசாமல் சட்டப்படியான நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அட்வைஸ் கூறி வருகின்றனர். மேலும் உண்மை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X