அமீர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி!
சென்னை : காமெடியனாக பல படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சூரி
இப்பொழுது கதாநாயகனாக அவதாரம் எடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இயக்குனர் அமீர் இயக்கும் புதிய திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கிராமத்து வாசனை மாறாமல்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரியின் காமெடிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கிராமத்து வாசனை மாறாமல் வெள்ளந்தியாக இவர் செய்யும் காமெடிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்கவைத்தது. விஜய்,அஜித்,சூர்யா, விக்ரம், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் சிவகார்த்திகேயன்-சூரி காம்போ ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்களில் கட்டாயமாக சூரி இடம்பெறுவது இன்றுவரை வழக்கமாக உள்ளது

கதாநாயகனாக அவதாரம்
இசை அமைப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் இப்போது ஹீரோக்களாக மாறிவரும் சூழலில் காமெடி நடிகர்களும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரியும் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் தங்கை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனைத்து பணிகளும் முடிந்து மிக விரைவிலேயே இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் சூரி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

விடுதலை
ஹீரோவாக நடித்த பிறகும் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சூரிக்கு ஜாக்பாட் அடித்தது போல மற்றும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மௌனம் பேசியதே, பருத்திவீரன்,ராம் என தமிழ் சினிமாவிற்கு ஆகச் சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர் அமீர் இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்யா நடிப்பில் உருவாகி வந்த சந்தனத்தேவன் என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படம் பல்வேறு சிக்கல்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

அமீர் இயக்கத்தில் ஹீரோவாக
இந்த நிலையில் அமீர் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











