என் மையும்.. நன் மை செய்யும்.. சின்ன பையன் லுக்கில்.. செம க்யூட்டாக வாக்களித்த நடிகர் சூரி!

சென்னை: நடிகர் சூரி சிக்கென சின்னப் பையன் லுக்கில் வாக்களித்து வந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

மனைவியுடன் வாக்களித்த Vijaysethupathi | TN Election 2021, Makkal Selvan VJS

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.

முன்னனி நடிகர்கள் நடிகைகள் என பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

பிரபலங்கள் வாக்குப்பதிவு

பிரபலங்கள் வாக்குப்பதிவு

பல பிரபலங்கள் வாக்களித்து விட்டு விரலில் மையுடன் இருக்கும் போட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். பிரபலங்கள் வாக்களிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி வாக்குப்பதிவு

நடிகர் சூரி வாக்குப்பதிவு

மேலும் வாக்களிப்பது நமது உரிமை, அதனை பொதுமக்கள் விட்டுக் கொடுக்க கூடாது என வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரியும் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

என் மையும் நன் மை செய்யும்

என் மையும் நன் மை செய்யும்

முகக்கவசம் கையுறை என அணிந்து சென்று வாக்களித்துள்ள நடிகர் சூரி, டைட் கட்டிங்கில் இளமையான லுக்கில் காட்சியளிக்கிறார், மேலும் தனது போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகர் சூரி, என் மையும் நன் மை செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்து விட்டேன் என பதிவிட்டுள்ளார்.

வெற்றிமாறன் படம்

வெற்றிமாறன் படம்

நடிகர் சூரி தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதோபோல் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூரிதான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X