அவரோட நடிச்சது இன்னும் அப்படியே மனசுல இருக்கு.. பவுன்ராஜ் மறைவு.. நடிகர் சூரி இரங்கல்!

சென்னை: நடிகர் பவுன்ராஜ் மறைவுக்கு நகைச்சுவை நடிகரான சூரி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

இணை இயக்குநரும் நடிகருமான பவுன்ராஜ் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

இயக்குநர் பொன்ராமின் நெருங்கிய நண்பரான பவுன்ராஜ் அவர் இயக்கிய பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

என்ன சோதனை?

என்ன சோதனை?

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் நடிகர் பவுன்ராஜ். இதென்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

ரஜினி முருகன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இந்நிலையில் அவரது திடீர் மரணம் தமிழ் சினிமாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரி இரங்கல்

நடிகர் சூரி இரங்கல்

அவருடைய மறைவுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பவுன்ராஜூடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயல்பான நகைச்சுவை நடிகன்

இயல்பான நகைச்சுவை நடிகன்

இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு, அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: pawnraj
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X