என்னங்க இது.. ஒரே உப்பா இருக்கு.. வீட்டுக்காரம்மாவிடம் டோஸ் வாங்கிய சூரி!

சென்னை: வீட்டில் பொழுதை கழிக்க சமையல்காரராக மாறிய சூரி குழந்தைகளுடன் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Soori family Kind advice | Self Qurantine

கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் நோக்கில் இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் ஊரடங்கை மதித்து பல பிரபலங்களும் தங்களின் வீட்டில் தங்களின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

Actor Soori cooking video goes viral

இதே போல் சூரியும் தனது நேரத்தை தனது குடும்பத்துடன் செலவளித்து வருகிறார். தற்போது தன் குடும்ப உறவுகளுடன் அவர் செய்த காமெடியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் .

இந்த காணொளியில் சூரி சமையல் செய்து கொண்டிருக்க அவரின் இரண்டு மகள்களும் விளையாட்டு சாமானில் சமையல் செய்து தங்கள் அப்பாவுக்கு நாங்கள் இதை தான் செய்கிறோம் என்றும் மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தி உணவாக செய்கிறோம் என்று கூற நடிகர் சூரி அதை தன் ஸ்டைலில் பாராட்டுகிறார்.

இதன்பின் சூரி சமைத்த உணவை ருசி பார்த்த அவரது மனைவி, உணவு உப்பு கரிக்கிறது என்று சொல்ல தன் குழந்தைகளிடம் சூரி அய்யய்யோ குழந்தைகளா சொதப்பிருச்சு வாங்க ஓடிறலாம் என்று சமையல் அறையை விட்டு ஓடி விடுகிறார் .

முழுக்க முழுக்க காமெடியாக இந்த காணொளியில் தன் குழந்தைகளுடன் விளையாடி இருக்கிறார் சூரி. இடையிடையே சூரியின் மனைவியும் அவரை கிண்டல் செய்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்து வைக்கிறது.

நடிகர் சூரி தற்போது தன் குடும்பத்துடன் அடித்திருக்கும் லூட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நேரத்தில் தாங்கள் இப்படி தான் நேரத்தை செலளித்து வருகிறோம் என்பதை காணொளியின் மூலம் பகிர்ந்திருக்கிறார் சூரி .

சூரியை போலவே பலரும் வீட்டிலே தங்களின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகும். ஏனெனில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால் இந்த நிலைமை கட்டாயமாக்கபட்டுள்ளது .

பல பிரபலங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை பகிர்ந்து வருகின்றனர். இந்த விஷயங்கள் வீட்டிலிருக்கும் பலருக்கும் பொழுதுபோக்காகவும் அமைந்துள்ளது.

More from Filmibeat

Read more about: soori சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X