கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் சூரி.. அந்த சர்ச்சைக்கு பிறகு இந்த வீடியோ டிரெண்டாகுது!

சென்னை: யாரையாவது வாழ்த்துவதாக இருந்தால் கூட மீனாட்சி அம்மன் ஆசியோடு நல்லா இருங்கன்னு வாழ்த்தக் கூடியவர்நடிகர் சூரி.

Recommended Video

கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் சூரி..

ஆனால், சூர்யா பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக, கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என நடிகர் சூரி பேசிய பேச்சு சர்ச்சையானது.

அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார். இந்நிலையில், அவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் விழாவில் அவர் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவினை சூரியின் நண்பர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

சூரிக்கு சாமி பக்தி அதிகம்

சூரிக்கு சாமி பக்தி அதிகம்

மதுரைக்காரரான நடிகர் சூரிக்கு சாமி பக்தி இயல்பாகவே அதிகம். சாமி பக்திக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல, அவர் கடவுள நம்பிக்கை மிக்கவர் அவருடைய குடும்பம் சாமியாடும் குடும்பம் என்பதை அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் தற்போது இந்த வீடியோவை ஷேர் செய்து தெளிவுபடுத்தி வருகின்றனர்.

சர்ச்சையான சூரியின் பேச்சு

சர்ச்சையான சூரியின் பேச்சு

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி எதேச்சையாக கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் ஆடியோக்கள் மூலமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு இந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சூரி மன்னிப்பு

சூரி மன்னிப்பு

கருத்து சுதந்திரம் உள்ள நாடாக இருந்தாலும், மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தக் கூடாது என்பதிலும் பிரபலங்கள் தெளிவாக செயல்பட்டு வரும் நிலையில், தன்னுடைய பேச்சின் நோக்கம் கோயில்களுக்கு எதிரானது அல்ல என்றும் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் நான், தன்னுடைய பேச்சின் மூலம் யார் மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னித்து விடுங்கள் என மன்னிப்பும் கேட்டு விட்டார்.

கோயிலில் ஆடிய சூரி

கோயிலில் ஆடிய சூரி

இந்நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் திரைப்பட நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது சொந்த ஊர் காரர்கள் அவரது நண்பர்கள் நடிகர் சூரியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X