twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருநங்கைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு நடிகர் சூரி நிவாரண பொருட்களை வழங்கினார்!

    |

    சென்னை : நடிகர் சூரி சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

    Recommended Video

    மாற்றுத்திறனாளி & திருநங்கைகளுக்கு உதவிய சூரி | Actor Soori

    லாக் டவுன் சமயத்தில் பல நடிகர்கள் பல ஊர்களில் பல விதமான உதவிகளை செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் . ஹாலிவுட் , பாலிவுட் துவங்கி தென் இந்தியா சினிமா துறையினரும் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர்.

    பல உதவிகளை செய்து வரும் காமெடி நடிகர் சூரி சமீபத்தில் காவல் நிலையம் சென்று போலீஸ் அதிகாரிகளிடம் ஆட்டோகிராப் வாங்கி சிறப்பு செய்தார் என்பது பலரும் பேசபட்ட விஷயம். இதனை தொடந்து, நடிகர் சூரி "வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" இணைந்து ஊரடங்கில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    யாராவது இவருக்கு சான்ஸ் கொடுங்கப்பா..கலாய்த்த ரசிகருக்கு கலக்கலாய் பதில் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!யாராவது இவருக்கு சான்ஸ் கொடுங்கப்பா..கலாய்த்த ரசிகருக்கு கலக்கலாய் பதில் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

    வருத்தம்

    வருத்தம்

    "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது

    நன்றி

    நன்றி

    கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். 'தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    தன்னாலான உதவி

    தன்னாலான உதவி

    சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையை சார்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தன்னால் ஆன உதவியை செய்து கொண்டுவருவதாக சூரி சொன்னார் . மேலும், "மாற்றம் பவுண்டேஷன்" திரு. சுஜித், திரு. உதய்சங்கர் அவர்களால் ஆன பல உதவி திட்டங்களை செய்து வருகின்றனர் என்பதை மிகவும் பெருமையாக பேசினார் சூரி.

    பாதுகாப்பாக இருங்கள்

    பாதுகாப்பாக இருங்கள்

    இவர்களோடு சேர்ந்து அனைவருக்கும் உதவ சூரி அன்போடு கேட்டுக் கொண்ட காரணத்தினால். சிறிதும் யோசிக்காமல் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சூரி தலைமையிலேயே இந்த உதவி திட்டங்கள் நடைபெறட்டும் என்று கூறினார்கள். அதன் மூலமாக உதவியை செய்ய வந்ததாக சூரியும் ஒப்புக்கொண்டார். உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று சொன்ன சூரி மேலும் இப்படிபட்ட உதவி திட்டங்கள் கொடுப்பது மக்கள் வாங்குவது விரைவில் கடவுள் நிறுத்த வேண்டும். இப்படி பட்ட சூழல் மீண்டும் எழக்கூடாது என்பதை வலுவாக வலியுறுத்தினார் .

    English summary
    Actor soori donate relief materials to Transgender and handicapped
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X