காமெடி நடிகர் சூரியிடம் ரூ.2 கோடியே 70 லட்சம் மோசடி.. சினிமா தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
சென்னை: நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
பிரபல காமெடி நடிகர் சூரி. இவர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார்.
இந்த காமெடி, பரோட்டா சூரி என்ற பெயரையும் அவருக்கு தந்தது. ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னணி ஹீரோ
விஜய், அஜித், விஷால், சூர்யா உள்பட முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள அவர், இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க இருக்கிறது. கொரோனாவால் இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

நிலம் வாங்கி தருவதாக
இந்நிலையில் நடிகர் சூரி, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து சமீபத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார்.

தயாரிப்பாளர்
காவல் ஆணையாளர் உத்தரவை அடுத்து இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சம்பள பாக்கி
வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக, நடிகர் சூரிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில், 40 லட்சம் ரூபாயை அன்புவேல் ராஜன் பாக்கி வைத்துள்ளார். அதை தரமறுத்த நிலையில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











