Soori: மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி.. அட சசிக்குமாரும் இருக்காரா!
சென்னை: நடிகர் சூரி -வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்தது.
சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் தற்போது வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளார் சூரி. இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.
மீண்டும் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் நடிகர் சூரி: நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றது. ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டெஸ்ட் சூட் முன்னதாக நடைபெற்ற நிலையில், தற்போது லண்டனில், படத்தின் சிஜி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை படத்தின் வேலைகளுக்கிடையிலும் இந்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன்.

காமெடியில் அசத்திவந்த சூரிக்குள் இருக்கும் நடிகரை விடுதலை படம் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் வெற்றிமாறன். படத்தின் முதல் பாகம் வெளியாகி சூரிக்கு மிகச்சிறந்த வகையில் கைகொடுத்துள்ளது. இதையடுத்து அவரை தொடர்ந்து நாயகனாக வைத்து அடுத்தடுத்தப் படங்களின் அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. அடுத்ததாக விடுதலை 2 படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் சூரி புதிய படத்தில் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திலும் சூரி நாயகனாகவே இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் பூஜையுடன் கும்பகோணத்தில் துவங்கியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தில் சூரியுடன் சசிக்குமாரும் முதன்மை கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். மல்ட்டி ஸ்டார் கான்செப்டில் ஆக்ஷன் என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகவுள்ளது. சூரி, சசிக்குமார் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளதும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











