Soori: முத்தத்தால மாரி செல்வராஜ் முகத்தை நனைச்சிட்டேன்.. வாழை படம் பார்த்துட்டு சூரி சிலிர்ப்பு!
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய சிறுவயதில் தான் சந்தித்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்த படத்தை வெளியிட்டால் போதும் என்றும் வெற்றி குறித்து சிறிதும் யோசிக்கவில்லை என்றும் தன்னுடைய பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
இந்த படத்தின் பல நிகழ்வுகள் தன்னுடைய பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரையும் இணைத்துள்ளதால் இந்த படத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது குறித்து தான் பதட்டத்துடன் இருப்பதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்தப் பதட்டத்தாலேயே படத்தை தன்னுடைய பெற்றோரை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் மாரி செல்வராஜ் மேலும் கூறியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ்: உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது வாழை படம். தான் சிறுவயதில் சந்தித்த பல விஷயங்களை பதிவு செய்வதற்கான களமாக வாழை படத்தை தான் எடுத்துக் கொண்டதாக மாரி செல்வராஜ் தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளார். இந்தக் கதைக்களத்தில் தன்னுடைய பெற்றோர், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரும் உள்ளதால் அவர்கள் இந்தக் கதைக்களத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்று பதட்டமாக உள்ளதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்தக் கதைக்களம் தன்னுடைய பெற்றோருக்கு அதிர்ச்சியளிக்கும் என்பதால் அவர்களை படத்தை பார்க்க வேண்டாம் என்று தான் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் தயாரிப்பு: படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து மாரி செல்வராஜூம் தயாரித்துள்ளார். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்யவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் படம் குறித்த அடுத்தடுத்த சுவாரஸ்ங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
வாழை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: நிகழ்ச்சியில் பா ரஞ்சித் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் பலரும் பங்கேற்று மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இயக்குநர் மணிரத்னம் வீடியோ மூலம் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மாரி செல்வராஜை பார்த்தால் பொறாமையாக இருப்பதாக அவர் கூறியது பல்வேறு தரப்பினரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சூரி, தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் தான் உடனடியாக சென்று மாரி செல்வராஜ் முகத்தை முத்தத்தால் நனைத்து விட்டேன் என்று சூரி கூறியுள்ளார்.
சூரி பாராட்டு: இது மாரி செல்வராஜின் நான்காவது படம் என்பதை சுட்டிக்காட்டிய சூரி, ஆனால் இது அவரது முதல் படமாக எடுக்க திட்டமிட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதலில் மூன்று படங்களை எடுத்து தன்னை நிரூபித்து விட்டு தற்போது வாழை படத்தை மாரி செல்வராஜ், கொடுத்துள்ளதாகவும் அதனால்தான் வாழை படத்திற்கு இதுபோன்ற பெரிய மேடை கிடைத்துள்ளதாகவும் சூரி பாராட்டு தெரிவித்துள்ளார். தான் தன்னுடைய பள்ளி காலங்களில் டீச்சர் கொண்டுவரும் டிபன் பாக்ஸை காதலித்துள்ளதாக சூரி கலகலப்பை கூட்டினார். முதல் மதிப்பெண்ணை எடுப்பவர்களுக்கே சாப்பாடு கொடுப்பேன் என்று தன்னுடைய ஆசிரியை கூறிவிட்டதால் தனக்கும் அதற்கும் தூரம் அதிகமாகிவிட்டதாகவும் சூரி கூறியுள்ளார். இதையடுத்து அவரது டிபன் பாக்சை திருடத் துவங்கிவிட்டதாகவும் சூரி மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் பாராட்டு: சூரியை தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், வாழை மற்றும் கொட்டுக்காளி படங்கள் ஒரே நாளில் ரிலீசாகவுள்ள நிலையில், இருவரும் மாறி மாறி இந்தப் படங்களை பார்த்து, மாறி மாறி கட்டியணைத்து வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











