இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது... தீயணைப்புத் துறையினருக்கு சூரி நன்றி

சென்னை : நடிகர் சூரி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் பரபரப்புடன் காணப்படுகிறார். பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு பாராட்டு அல்லது குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் மரக்கிளையில் சிக்கிய காகத்தின் உயிரை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

நடிகர் சூரி காமெடி நடிகராக தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்.

சிறப்பான யோகா

சிறப்பான யோகா

தன்னுடைய உடலையும் மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டுள்ளார் சூரி. யோகா தினத்தையொட்டி சிறப்பான வகையில் சில யோகாக்களை செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மிகவும் கடினமான யோக முத்திரைகளை அவர் செய்திருந்தது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

சமூக வலைதளங்களிலும் சூரி பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள், புதுப்பட ரிலீஸ் உள்ளிட்டவற்றிற்கு உடனடியாக வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சமூக நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கொரோனா காலத்தில் அனைவரையும் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தீயணைப்புத்துறைக்கு சூரி பாராட்டு

தீயணைப்புத்துறைக்கு சூரி பாராட்டு

இந்நிலையில் மரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை இரண்டு மணிநேரங்கள் போராடி மீட்ட தீயணைப்புத்துறையினரின் செயலுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரி நன்றி தெரிவித்துள்ளார். இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்பதை உணர்ந்து செயல்பட்ட தீயணைப்புத்துறையினருக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

சூரி பாராட்டு

சூரி பாராட்டு

இயக்குநர் இரா சரவணன் தீயணைப்புத்துறையினரின் இந்த சிறப்பான செயல்பாட்டை புகைப்படங்களுடன் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு கமெண்ட் செய்து சூரி தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார். முன்னதாக புறாவை வைத்து இதே போன்றதொரு வீடியோவை தனது குழந்தைகளுடன் இணைந்து அவர் வெளியிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X