சூரிக்கு வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்.. அட இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து நாயகனாக களமிறங்கி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் அவருக்கு ஹீரோவாக மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார். இனிமேல் இப்படித்தான் என்று மார்த்தட்டி களத்தில் உள்ளார் சூரி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான கருடன் படமும் சூரிக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், ஆகஸ்ட் 23ம் தேதி சூரியின் கொட்டுக்காளி படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.

Soori Kottukkaali movie vetri maaran


நடிகர் சூரி: வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் பரோட்டா கணக்கு சொன்னவர் நடிகர் சூரி. முதல் படத்திலேயே பரோட்டா மூலம் கவனம் ஈர்த்த நடிகர் சூரி, அந்தப்படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கியிருந்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்த படங்களில் காமெடி கலாட்டா செய்த சூரி, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் களமிறங்கி காமெடி ட்ராக்கில் பயணம் செய்து வந்தார். சிவகார்த்திகேயன் படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வைத்து அதிரடியாக தன்னை வெளிப்படுத்திய சூரி, ஹீரோ மெட்டீரியலாக வெற்றிமாறன் கண்ணில் பட அவரை வைத்து விடுதலை படத்தை கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.

விடுதலை படம்: கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபள் கேரக்டராக மிகப்பெரிய அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தினார் சூரி. இந்தப் படத்தில் நாயகனாக இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இத்தனை நாட்களாக இந்த நடிப்பை எங்கே பாஸ் ஒளிச்சி வச்சிருந்தீங்க என்று அனைவருமே கேள்வி கேட்ட நிலையில், விடுதலை படம் அவரது லைஃப் டிராக்கையே மாற்றியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி இனிமே இப்படித்தான் என்னும்படியாக அடுத்தடுத்து ஹீரோவாகவே சூரிக்கு வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது.

கொட்டுக்காளி படம்: இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரி ஹீரோவாக நடித்து வெளியான கருடன் படமும் மிகப்பெரிய பாராட்டுக்களை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தில் சசிக்குமார், உன்னி முகுந்தன் இவர்களையும் மீறி சூரியின் நடிப்பு கவனம் பெற்றது. இந்தப்படமும் மிகச்சிறப்பான வெற்றியை பெற்று வசூல் சாதனை செய்த நிலையில், வரும் ஆகஸ்ட் 23ம் தேதி சூரியின் அடுத்தப்படமான கொட்டுக்காளி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை கூழாங்கல் என்ற படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனம் பெற்ற பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். கூழாங்கல் படம் கடந்த 2022ம் ஆண்டில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொட்டுக்காளி பட பிரமேஷன்கள்: இந்நிலையில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இரண்டாவது படைப்பாக ரசிகர்களை மிரட்ட தயாராகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் சூரிக்கு ஜோடியாகியுள்ளார் அன்னா பென். சூரி இந்தப் படத்தில் பாண்டி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தனது கேரக்டர் குறித்த பதிவுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூரி, அன்னா பென் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்: இதனிடையே, வினோத் ராஜை மிஸ் செய்துவிட வேண்டாம் என்று இயக்குநர் வெற்றிமாறனே தன்னிடம் கூறியதாக சூரி தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். விடுதலை படத்தில் தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது, ஹீரோவாக நடிக்க தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் விடுதலை படத்தின் ரிலீசுக்கு பிறகு அந்தப் படங்களை கமிட் செய்துக் கொள்ள வெற்றி மாறன் தனக்கு அறிவுறுத்தியதாகவும் சூரி கூறியுள்ளார். ஆனால் வினோத் ராஜின் படம் குறித்து பேசியபோது, உடனடியாக ஒப்புக் கொள்ளும்படியும் அவரை மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் வெற்றிமாறன் தனக்கு அட்வைஸ் செய்ததாக சூரி கூறியுள்ளார். இந்திய அளவில் ஆகச்சிறந்த இயக்குநர்களில் வினோத் ராஜ் ஒருவர் என்று வெற்றிமாறனே சர்ட்டிபிகேட் கொடுத்ததாகவும் சூரி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X