Soori: நெகட்டிவ்வாக பேசினால் பிரபலமாகலாம் என்று செயல்படுகிறார்கள்.. கங்குவா படம் குறித்து பேசிய சூரி

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் விடுதலை 2 படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதன்போது அடுத்தடுத்து ரசிகர்களுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் கங்குவா படம் குறித்தும் நயன்தாரா -தனுஷ் விவகாரம் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் தன்னுடைய நடிப்பில் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள விடுதலை 2 படம் குறித்தும் அதில் இளையராஜா இசை குறித்தும் அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

soori viduthalai 2 movie kanguva movie

நடிகர் சூரி: நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுத்தவர். முதல் படமே அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் மூலம் அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்து வந்தார் சூரி. சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் இவரது காம்பினேஷன் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார் சூரி.

விடுதலை 2 படம்: விடுதலை படம் வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை சூரிக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தினார் சூரி. பவானிஸ்ரீ உடனான காதல் காட்சிகளிலும் சூரியின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து கருடன், கொட்டுக்காளி என ஹீரோவாக இவரது படங்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, அடுத்த மாதம் 20ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளது. இந்த படமும் முதல் பாகத்தை போலவே ரசிகர்களை வெகுவாக கவரும் என்று சூரி இன்றைய தினம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் சூரி: இன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி, விடுதலை 2 படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் குறிப்பிட்டார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் நேற்றைய தினம் வெளியான நிலையில் இளையராஜாவின் இசை குறித்து சிலாகித்து பேசிய சூரி, இளையராஜா இன்னும் அதிகமான பாடல்களையும் இசையையும் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கங்குவா படம் குறித்து பேசிய நடிகர் சூரி, ஒரு எளிய ரசிகனாக தனக்கு கங்கவா படம் மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

நெகட்டிவ் விமர்சனங்களை எடுக்க வேண்டாம்: தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று கங்குவா படத்தை தான் பார்த்ததாகவும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல படக்குழுவினர் முயற்சி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அந்த படம் தோல்வியுற வேண்டும் என்று நினைக்க மாட்டார் என்றும் அந்த வகையில் இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளதாகவும் சூரி கூறியுள்ளார். படம் குறித்து ஒரு சிலர் கூறும் நெகடிவ் விமர்சனங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை என்றும் படம் அதிகமான நபர்களை கவர்ந்துள்ளதாகவும் சூரி குறிப்பிட்டுள்ளார்.

நெகட்டிவ் விமர்சனங்களால் ரீச்: மேலும் வாராவாரம் கேமரா முன்பு வரவேண்டும் என்பதற்காகவே ஒரு சிலர் படங்களை பார்த்துவிட்டு உடனடியாக நெகடிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாகவும் சூரி தெரிவித்துள்ளார். நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்தால் மட்டுமே ரீச்சாக முடியும் என்பவதாக இவர்கள் செயல்பட்டு வருவதாகவும் சூரி குறிப்பிட்டுள்ளார். கங்குவா படத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படக்குழுவினர் மிகவும் கடினமான உழைப்பை போட்டுள்ளதாகவும் சூரி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X