Soori : டெஸ்ட் சூட் போனப்பவே மிரண்டுட்டேன்.. வாடிவாசல் படம் குறித்து மெய்சிலிர்த்த சூரி!
சென்னை : நடிகர் சூரி -வெற்றிமாறன் கூட்டணியில் மிரட்டலான ஓபனிங்கை விடுதலை படம் பெற்றுள்ளது.
முன்னதாக விடுதலை படத்திற்காக பல பிரமோஷன்களை செய்துவந்த சூரி, தன்னுடைய பேட்டிகளை தொடர்ந்து வருகிறார்.
விடுதலை படத்தின் வெற்றியை அவர் அனைத்து தரப்பினருடனும் பகிர்ந்து வருகிறார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நடிகர் சூரி
நடிகர் சூரி என்ற சிறப்பான கலைஞனை தன்னுடைய விடுதலை என்ற படத்தின்மூலம் சிறப்பாக வெளியில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் சிறப்பை வெளிக் கொண்டுவந்த போதிலும் ஒரு காமெடி நடிகரை தன்னுடைய படத்தில் லீட் கேரக்டரில் தைரியமாக சேர்த்துக் கொண்டு, அவரின் பெஸ்ட்டை வெளியில் கொண்டு வந்துள்ளது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

விடுதலை படம்
அந்த வகையில் விடுதலை படத்தின் வெற்றி, வெற்றி மாறனுக்கு மட்டுமில்லாமல் சூரிக்கும் சிறப்பாகவே அமைந்துள்ளது. நாயகனாக நடித்துள்ள சூரிக்கு இந்தப் படம் ரசிகர்களிடையே நம்பிக்கையை கொடுத்துள்ள நிலையில் அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்திருந்தார் சூரி.

வாடிவாசல் குறித்து சூரி
இந்நிலையில் படம் வெளியாகி அடுத்தடுத்த சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் சூர்யா -வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்ததாக நிகழவுள்ள வாடிவாசல் குறித்து அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போது மிகுந்த உற்சாகடைந்துள்ளார் சூரி. படம் மிகவும் சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.

வாடிவாசல் டெஸ்ட் சூட்
படத்தின் டெஸ்ட் சூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிலையில், அதில் பங்கேற்றபோதே, படத்தின் சிறப்பு குறித்து தனக்கு தெரிந்துவிட்டதாக குறிப்பிட்டார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும்போது மக்கள் படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே மேற்கொள்ளப்பட்ட நிலையில், சூர்யா, வெற்றிமாறன் இருவரும் அடுத்தடுத்த படைப்புகளில் பிசியானதால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது.

வெற்றிமாறனின் கமிட்மெண்ட்கள்
விடுதலை படத்தின் வெற்றி கொடுத்துள்ள உற்சாகத்துடனேயே வாடிவாசல் படத்தை துவக்கவுள்ளார் வெற்றிமாறன். விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் அடுத்ததாக வடசென்னை படத்தின் சூட்டிங் இதில் எதை துவக்குவார் என்பது குறித்தும் அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ற வகையில் படங்களை கொடுத்துவரும் வெற்றிமாறன், எந்தப் படத்தை கொடுத்தாலும் வரவேற்பு கொடுக்க நாங்கள் ரெடி என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











