Don't Miss!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- News
பாஜகவுக்கு ‘ஐடியா’வே இல்ல.. ஓபிஎஸ் இழுத்து விடுறார்.. மூல காரணமே அவர் தானாம்.. மாஜி சொல்லும் சேதி!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
போலீஸார் கிடுக்குபிடி கேள்வி… தொடரும் விசாரணை…: விரக்தியின் உச்சத்தில் சூரி!
சென்னை: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் முதன்மையான பாத்திரத்தில் நடித்து வருகிறார் சூரி.
விடுதலை திரைப்படம் தவிர பல படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வரும் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிலம் வாங்கித் தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை பணம் மோசடி செய்த வழக்கில், சூரி அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாராவால்
வெற்றிமாறன்
–
ராகவா
லாரன்ஸ்
கூட்டணியில்
பிரச்சினையா?:
அதிகாரம்
லேட்டஸ்ட்
அப்டேட்

வெண்ணிலா கபடி குழு கூட்டணி
பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக முகம் காட்டிய சூரிக்கு, திருப்பு முனையாக அமைந்த படம் தான் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், தனது பரோட்டா காமெடியால் பிரபலமானார் சூரி. அப்போது விஷ்ணு விஷாலுடன் ஏற்பட்ட நட்பு, கடைசியில் அவருக்கே வினையாகியுள்ளது. விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவுடன் சூரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சூரிக்கு நிலம் வாங்கித் தருவதாக ரமேஷ் குடவாலா கூறியதாக சொல்லப்படுகிறது.

நிலம் வாங்கித் தருவதாக மோசடி
அதனை நம்பி சூரி பணம் கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் இருவரும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் சூரி. இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான சூரி இன்று 4 வது முறையாகவும் ஆஜரானார். கடந்த ஏப்ரல் மாதம் 3வது முறையாக ஆஜரான சூரியிடம் 110 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

விரக்தியான சூரி
இந்நிலையில், இன்று ஆஜரான சூரி, சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சூரி, "முன்பெல்லாம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குப் போனால், ஷூட்டிங் போயிட்டு வரியான்னு கேப்பாங்க. ஆனா, இப்பலாம் வீட்டை விட்டு வெளியே போனாலே போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வரியா என குடும்பத்தினார் கேட்கின்றனர். மேலும், முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் அப்போதும் விசாரணை நடந்தது. இப்போதும் வந்தேன் விசாரணை மட்டும் தான் நடக்கிறது" என விரக்தியுடன் கூறியுள்ளார்.

நியாயம் வேண்டும்
தொடர்ந்து பேசியுள்ள சூரி, "பண மோசடி வழக்கில் திரும்ப திரும்ப வருகிறேன், ஆனால் விசாரணை மட்டுமே நடைபெறுகிறது. எனக் கூறினார். அப்போது, எதிர்தரப்புக்கு சாதகமாக விசாரணை நடைபெறுகிறுதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எந்த சாதகமும் வேண்டாம். விசாரணை நியாயமாக நடந்தால் போதும். காவல்துறை, நீதிமன்றம், கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை" என அதிருப்தியுடன் பதிலளித்துவிட்டு சென்றார். இந்த மோசடி புகாரில் இதுவரை 4 முறை சென்னை மத்திய குற்றபிரிவு அலுவலகத்தில் சூரி ஆஜராகியுள்ள நிலையில், விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி.,யுமான ரமேஷ் குடவாலா ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.