சூரி பிரமாதமா நடிச்சிருக்கார்... நண்பன் சூரிக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி!

சென்னை : தனித்துவமான காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக உள்ளார் நடிகர் சூரி

காமெடியனாக மட்டும் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சூரி இப்பொழுது ஹீரோவாக விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் விடுதலைப் படத்தில் நடிகர் சூரி பிரமாதமாக நடித்திருக்கிறார் என புகழ்ந்ததோடு அட்வைஸும் செய்ததாக விஜய்சேதுபதி பகிர்ந்துள்ளார்.

பரோட்டா சூரி

பரோட்டா சூரி

துறுதுறுப்பான நடிப்பின் மூலம் தனித்துவமான காமெடியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சூரி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் நடித்த புரோட்டா காமெடியின் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து சூரி பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார்.

சூரி சிவகார்த்திகேயன் காம்போ

சூரி சிவகார்த்திகேயன் காம்போ

இது வரை பல நடிகர்களுடன் சூரி இணைந்து நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயன்-சூரி காமெடி வெளியாகும் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை,ரஜினிமுருகன், சீமராஜா ,நம்ம வீட்டுப் பிள்ளை மற்றும் சமீபத்தில் வெளியான டான் என அனைத்து படங்களிலும் சூரி சிவகார்த்திகேயன் காம்போ இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

ஹீரோவாக அறிமுகம்

ஹீரோவாக அறிமுகம்

காமெடியன்கள் அனைவரும் ஹீரோவாக நடிப்பது இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது நடிகர் சூரியும் ஹீரோவாக விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். பொல்லாதவன் ஆடுகளம் வடச்சென்னை அசுரன் விசாரணை என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதித்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரி பிரமாதமா நடிச்சிருக்கார்

சூரி பிரமாதமா நடிச்சிருக்கார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி விடுதலையில் சூரி பிரமாதமாக நடித்துள்ளார். அவர் என்னுடைய நண்பன். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்ததிலிருந்து இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் நான் அடிக்கடி சூரியிடம் சொல்லுவது ஒரே மாதிரி காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான குணச்சித்திர வேடங்களிலும் செய். உன்னை ஹீரோவாக ஆக்குகிறேன் என கூறி ஆசை காட்டுபவர்கள் இடம் செல்லாதே பெரிய பெரிய இயக்குனர்களை அடிக்கடி சந்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க அட்வைஸ் கொடுத்து வந்தேன் ஆனால் இப்பொழுது விடுதலை படத்தில் சூரி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X