புற்றுநோயால் உருக்குலைந்துபோன 'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி: விஜய் சேதுபதி, சூரி நிதியுதவி!

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்படும் நடிகர் தவசிக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி நிதியுதவி செய்துள்ளனர்.

Recommended Video

ரூபாய் 1 லட்சம் நடிகர் தவசிக்கு கொடுத்த விஜய் சேதுபதி | Sivakarthikeyan, Soori

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி.

அந்தப் படத்தில் இடம்பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனத்தின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

அண்ணாத்த படத்தில்..

அண்ணாத்த படத்தில்..

அடர்த்தியான மீசையும், தாடியும் இவரது அடையாளமாகும். 'கிழக்குச் சீமையிலே' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் தவசி. நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்திலும் தவசி நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

புற்று நோயால் பாதிப்பு

புற்று நோயால் பாதிப்பு

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் மிகவும் ஏழ்மை நிலையில் மருத்துவ செலவுக்கு போராடி வருகிறார். தமிழ் தமிழ் திரையுலகம் தவசிக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் தவசியா இது?

நடிகர் தவசியா இது?

மேலும் மீசை தாடி எதுவும் இல்லாமல் மொட்டை அடித்து உடல் மெலிந்து போயிருக்கும் தவசியின் போட்டோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் தவசியா இது என கேட்டு வந்தனர்.

தேனி மாவட்டம் சங்கராபுரம்

தேனி மாவட்டம் சங்கராபுரம்

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தில் நடிகர் தவசி படுகாயம் அடைந்தார். தேனி மாவட்டம் சங்கராபுரம் இவரது பூர்வீகம் ஆகும்.

எம்எல்ஏ சரவணன்

எம்எல்ஏ சரவணன்

தற்போது தனது மனைவியின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையில் வசித்து வருகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு சொந்தமான செல்லூரில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உதவிக்கரம் நீட்டிய சூரி

உதவிக்கரம் நீட்டிய சூரி

நடிகர் தவசியின் இந்த நிலை குறித்து அறிந்த நகைச்சுவை நடிகர் 'புரோட்டா' சூரி, அவருக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார். தான் நிதியுதவி செய்திருப்பதோடு, மேலும் உதவிகள் கிடைக்க வழி செய்வதாகவும் நடிகர் சூரி உறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி உதவி

நடிகர் விஜய் சேதுபதி உதவி

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தவசியின் நிலைமையை அறிந்து அவருக்கு உதவி செய்துவரும் நடிகர்களுக்கு ரசிகர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X