Soori: ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாரான சூரியின் ராஜாக்கூர் கருப்பன்.. என்ன கம்பீரமா இருக்கு!
சென்னை: பொங்கல் பண்டிகை இப்போதே களைகட்ட துவங்கியுள்ளது. நாளை மறுதினம் போகி பண்டிகையில் துவங்கி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்த தினங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டமாக்க மக்கள் காத்திருக்கின்றனர். பொதுவாக இந்த பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவதே வழக்கமாக உள்ளது.
தங்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு ஊர்களில், பல்வேறு மாநிலங்களில் , பல்வேறு நாடுகளில் இருந்தாலும் பொங்கல் பண்டிகையை தங்களின் சொந்த பந்தங்களுடன் கொண்டாடி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் மக்கள் சிறப்பித்து வருகின்றனர். இதில் ஜல்லிக்கட்டும் சிறப்பாக இணைந்துள்ளது.

பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக அரசும் பொதுமக்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். நாளை மறுதினம் போகி பண்டிகையுடன் துவங்கும் இந்த பண்டிகை அடுத்தடுத்து பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என களைகட்டும். இதையொட்டி ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். இதற்கென அடுத்தடுத்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவையும் இயக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுரிகளுக்கும் 6 முதல் 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்பாக துவங்கியுள்ள நிலையில், முதல் பண்டிகையை தமிழர் திருநாளை கொண்டாடி தீர்க்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி: பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தவிர்க்க முடியாது. இதற்காக ஒவ்வொரு ஊரிலும் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அவனியாபுரத்திலும் உலகப்புகழ் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக தண்டவாள வாடிவாசல் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல ஜல்லிககட்டுக்காக காளைகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அவனியாபுரம் மட்டுமில்லாமல் பாலமேடு, அலங்காநல்லூர், உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன.
சூரியின் ராஜாக்கூர் கருப்பன்: இந்நிலையில் தற்போது நடிகர் சூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய ராஜாக்கூர் கருப்பன் பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்பதாக அவர் கூறியுள்ளார். அந்த காளைக்கு ஆரத்தி காட்டப்படும் நிலையில், கம்பீரமான அந்த காளையை சூரி அழைத்துவந்து அதற்கு முத்தம் கொடுப்பதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. நடிகர் சூரி மதுரையின் ராஜாக்கூரை சேர்ந்தவர் என்பதால் அவரது கருப்பனை சிறப்பாக ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது காளை எந்த போட்டியில் பங்கேற்கிறது என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
காமெடி டூ ஹீரோ: காமெடியனாக நடித்துவந்த நடிகர் சூரி, ஒரு கட்டத்தில் விடுதலை படத்தின்மூலம் ஹீரோவாக களமிறங்கி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதலை 2 படமும் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை சூரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. தன்னுடைய நடிப்புத் தொழிலுக்காக சென்னையில் செட்டில் ஆனாலும் தொடர்ந்து மதுரையில் அடுத்தடுத்த உணவகங்களையும் துவங்கி சூரி நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











