சூரிதான் சூப்பர் ஸ்டார்! மத்தவங்க எல்லாம் ஓரம் போங்க! பிரபலத்தின் பதிவினால் பற்றிக்கொண்ட கோலிவுட்!

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகர் என்றால் சூரியை குறிப்பிடலாம். தீபாவளி திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்த சூரி தனது விடாமுயற்சியால் காமெடியனாக மாறி சிறப்பாக நடித்து வந்ததால் தன்னைச் சுற்றி மிகப் பெரிய வணிகமே நடைபெறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

வெற்றிமாறன் சூரியை வைத்து என்ன மாதிரியான படம் கொடுக்கப் போகிறார்? வெற்றிமாறன் தனது பாணி படங்களை விட்டுவிட்டு காமெடி ட்ராக்கில் களமிறங்கி விட்டாரா என்ற கேள்விகள் எல்லாம் வெற்றி மாறனை நோக்கி இருந்தாலும் வெற்றிமாறனின் இயக்கத்திற்கு சூரி எப்படி தாக்கு பிடிப்பார் என்ற கேள்வி சூரியைச் சுற்றி இருந்தது.

Soori Blue Sattai Maran Viduthalai 2

ஆனால் இந்த சந்தேக கேள்விகளுக்கெல்லாம் நெத்திய அடியாய் அமைந்தது விடுதலை பாகம் ஒன்று. விடுதலைப் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் தனக்கு காமெடி மட்டுமல்ல சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க வரும் என சூரி நிருபித்துக் கட்டினார். இதனால் விடுதலை பாகம் ஒன்று வெளியான உடனே ரசிகர்கள் விடுதலை படத்தின் பாகம் 2 எப்போது வரும் என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

Soori Blue Sattai Maran Viduthalai 2

கதையின் நாயகன் சூரி: வெற்றிமாறன் மட்டுமில்லாமல் சூரி இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழுமலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அதேபோல் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச சினிமா ரசிகர்களின் பாராட்டை குவித்து வருகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்திலும் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார்.

Soori Blue Sattai Maran Viduthalai 2

கருடன்: இந்நிலையில் சூரியின் நடிப்பில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியான படம் கருடன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை என்றாலும் திரை கதையை தனது அசாத்திய நடிப்பால் சூரி ஓவர்டேக் செய்துள்ளார் என்று கூறவேண்டும். தமிழில் எதார்த்த ஹீரோவாக மாறிவரும் சூரி வரும் காலங்களில் மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்பது கேள்விக்குறி தான் எனும் அளவிற்கு ரசிகர்கள் அவரது படங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Soori Blue Sattai Maran Viduthalai 2

சர்வதேச கதாநாயகன்: தற்போது இவரது நடிப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் ஏற்கனவே உருவாகி சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகின்றது கொட்டுக்காளி மற்றும் ஏழு கடல் ஏழு மலை படங்கள்.

Soori Blue Sattai Maran Viduthalai 2

அமெரிக்கா: இப்படியான நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸிற்குச் சென்றுள்ள நடிகர் சூரி அங்கு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக ஒரு சிலர் மதுரை டூ லாஸ் வேகாஸ் எனவும் பரோட்டா சூரி டூ கதாநாயகன் சூரி எனவும் ஒரு சிலர் தலைவர் சாயல் தெரிகின்றதே எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் சூரி: இப்படியான நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சூரியின் புகைப்படத்தை பகிர்ந்து சூப்பர் ஸ்டார் சூரி என கேப்சன் இட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர் சினிமாவில் வெற்றி பெற்ற அனைவரும் சூப்பர் ஸ்டார் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X