சாமி 2 படத்திற்குப் பிறகு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சூரி
சென்னை: நடிகர் சூரி தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார்.
சீரியலுக்கும் சினிமாவிற்கும் இடையே உள்ள தூரம் என்பது மிகக் குறைவு தான். சீரியலில் கலக்கிய பல நடிகர்கள் சினிமாவில் கால்பதித்துள்ளனர். அதேபோல் சினிமாவில் வாய்ப்புகள் குறையும்போது பல நடிகர்களுக்கு சீரியல் ஒரு புகழிடமாக மாறுவதும் இயல்பு.

ஆனால் இதற்கு சற்று விதிவிலக்காக சூரி ஒரு சீரியலில் நடிக்க உள்ளார். தற்போதைக்கு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூரி. ஆனாலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள "திருமணம்" என்ற தொடரில் சிறப்புத் தோற்றத்தில் வர உள்ளார் சூரி.
திருமணத்தை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த தொடரில் சித்து மற்றும் ஜனனி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். அவர்களுடைய திருமணத்திலிருந்து சீரியல் தொடங்குவதாக காட்சி அமைத்துள்ளனராம். திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் காட்சியில் சூரி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சீரியல் இயக்குனர் கேட்டதும் மறுப்பு தெரிவிக்காமல் உடனே நடித்து கொடுத்துள்ளார்.
[ "சிம்டாங்காரன்" பாடல் விமர்சனத்திற்கு பதிலளித்த ஏஆர்.ரஹ்மான்! ]
இந்த சீரியல் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. சூரிக்கு சீமராஜா, சாமி ஸ்கொயர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சண்டக்கோழி 2, கலக்குற மாப்ள, தேவராட்டம் என பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











