திமுக தலைவர் மு க ஸ்டாலிக்கும்… உதயநிதி ஸ்டாலிக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய சூரி !
சென்னை : முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
திராவிட முன்னேற்றக்கழம் அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் அவரை கூட்டணிக்கட்சித் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

159 இடங்களில் வெற்றி
ஏப்ரல் 6ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகள் மே 2ந் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

திமுக ஆட்சி
அதிமுக 66 இடங்களையும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களையும் வென்றுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகளில் திமுக 37.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது.

நேரில் வாழ்த்து
தமிழக முதல்வராக முகஸ்டாலின் பதவியேற்க உள்ளதை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார நிபுணர்கள் . திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
அதேபோல நகைக்சுவை நடிகர் சூரி திமுகத் தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரி, புரட்சி படைத்த முதல்வருக்கும், துணை நின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











