Actor Soori: அம்மாவோட அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.. சூரி ஆதங்கம்!

சென்னை: வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. காமெடியனாக துவங்கிய இவரது பயணம் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடியனாகவே தொடர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான விடுதலை படம் அவரது வாழ்க்கை பாதையையும் திரைப் பாதையையும் மாற்றியுள்ளது.

இந்த படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்த சூரிக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கவே வாய்ப்புகள் வருவதாக அவர் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கருடன் படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறியுள்ளது.

Soori Garudan movie Durai senthilkumar tamil cinema

நடிகர் சூரி: நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்த சூரிக்கு ஆரம்ப காலம் மிகவும் போராட்டமாக இருந்தது. தொடர்ந்து கிடைத்த வேலைகளை எல்லாம் செய்த சூரிக்கு வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். சூரியின் பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடி ரசிகர்களை அசத்த தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்து வந்தார்.. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் கண்ணில் சூரியின் ஹீரோ இமேஜ் பட்ட நிலையில் கடந்த ஆண்டில் வெற்றிமாறன் -சூரி கூட்டணியில் வெளியான விடுதலைப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நாயகன் சூரி: விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சூரி. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான கருடன் படமும் சூரி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மீண்டும் ஹீரோவாக மாஸ் காட்டியுள்ளார் சூரி. படம் வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்திற்காக முன்னதாக அதிகமான பிரமோஷன்களில் சூரி ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து தனக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்றும் ஹீரோவாக நடிக்க மட்டுமே தன்னை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அணுகுவதாகவும் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்.

கருடன் பட பிரமோஷன்: சூரி தன்னுடைய மற்றொரு பேட்டியில், தன்னுடைய அம்மா குறித்து பேசியிருந்த வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சூரியின் வீட்டில் அவருடன் சேர்த்து அண்ணன் -தம்பிகள் ஆறு பேர். முதலில் அண்ணன் பிறந்த நிலையில் இரண்டாவதாக இரட்டையர்கள் பிறந்துள்ளனர். அதுவும் ஆண்களாகவே போக, அடுத்தடுத்து பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக சூரியின் அம்மாவை அவரது உறவினர்கள் கட்டாயப்படுத்தியதாகவும் இதையடுத்து அவரும் அடுத்தடுத்து ஆண் குழந்தைகளாகவே பெற்றதாகவும் சூரி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


சூரி அம்மாவின் ஆசை: தன்னுடைய அம்மாவிற்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று அதுவும் அடுத்தடுத்து குழந்தை பிறப்பிற்கு காரணம் என்றும் சூரி இந்த பேட்டியில் பேசியுள்ளார். 5 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் ஆறாவதாகவும் மீண்டும் அவரை பெண் குழந்தை பெற்றுக் கொடுக்க தன்னுடைய பாட்டி உள்ளிட்டவர்கள் வற்புறுத்த அவர் கோபித்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கே சென்று விட்டதாகவும் பின்பு சமாதானப்படுத்தி அழைத்து வந்து பிறந்தவன்தான் தான் என்றும் சூரி மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X