Actor Soori: கேமரா முன்னாடி மட்டுமில்ல.. பின்னாடியும் தளபதி சூப்பர்.. விஜய் குறித்து பகிர்ந்த சூரி!

நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார். சினிமாவில் 30 ஆண்டுகளை கடந்து அவரது பயணம் ஹீரோவாக தொடர்ந்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் அரசியலில் ஈடுபட உள்ளார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அறிவித்த விஜய் தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ரசிகர்களை மட்டுமில்லாமல் சக நடிகர்களையும் ஏராளமான அளவில் கவர்ந்து வருகிறார் விஜய். அந்த வகையில் தமிழில் விஜய்யில் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது ஸ்டைல், டான்ஸ் உள்ளிட்டவை எப்போதுமே மற்றவர்களின் பாராட்டிற்கு உள்ளாகி வருகின்றன.

vijay soori viduthalai 2 movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவந்த நிலையில் தற்போது தன்னுடைய பாதையை மாற்றியுள்ளார்/ தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்த நிலையில். தன்னுடைய இறுதி படமாக அறிவிக்கப்பட்ட தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விஜய் -பூஜா ஹெக்டே காம்பினேஷன் காட்சிகளும் விஜய் -பாபி தியோல் காம்பினேஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் என்ட்ரி: நாளைய தீர்ப்பு படம் மூலம் தான் நடிகர் விஜய் தமிழில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். இதெல்லாம் ஒரு மூஞ்சியா இவரெல்லாம் நடிக்க வந்து விட்டார் என்பதாகத்தான் இவரது துவக்ககால விமர்சனங்கள் இருந்தன. ஆனால் தன்னுடைய தடைகற்களை எல்லாம் படிக்கட்டுகளாக மாற்றும் யுக்தி அவருக்கு சிறப்பாக கைவந்தது. ஒரு கட்டத்தில் இளைய தளபதியாக ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தளபதியாக கொண்டாடப்படுகிறார். அவர் சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

விஜய் குறித்து சூரி பாராட்டு: இருந்த போதிலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் ரசிகர்களால் மட்டுமில்லாமல் சக நடிகர்களாலும் கொண்டாடப்படும விஷயமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி விஜய்யின் நடையை பாராட்டி பேசியுள்ளார் சூரி நடிப்பில் வரும் 20ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் விடுதலை 2 படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்து விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் சூரி. அந்த வகையில் விஜய் குறித்து பேசியுள்ள சூரி, அவர் சினிமாவில் கேமரா முன் மட்டுமில்லாமல் இயல்பாகவே சிறப்பான நடையை கொண்டவர் என்று பேசியுள்ளார்.

விடுதலை 2 படம்: விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், தற்போது ரிலீசாக உள்ள விடுதலை 2 படமும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. முதல் பாகம் சூரிக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் இந்த படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X