Actor Soori: சிவகார்த்திகேயன் டைரக்ஷன் செஞ்சா நடிக்க எப்பவும் ரெடி.. சூரி கூல் பேச்சு!
சென்னை: நடிகர் சூரி விடுதலை படத்தை தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். காமெடியனாக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சூரி ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டில் விடுதலை படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சூழலில் அடுத்ததாக சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களுடன் இணைந்து கருடன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களில் சூரி ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சூரி: நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோவாக ட்ராக் மாறியுள்ளார். கடந்த ஆண்டில் இவர் ஹீரோவாக நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் வெளியானது. இந்தப் படத்தில் ஹீரோ மெட்டீரியலுக்கான அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டுக்களை குவித்தார். தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். விடுதலை படத்திற்கு பிறகு தனக்கு காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்றும் அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். முன்னதாக காமெடியனாக தன்னுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் அதகளம் செய்துவந்த சூரி, தற்போது ஹீரோவாகவும் அதிரடியாக நடித்து வருகிறார்.
கருடன் படம்: அடுத்ததாக சூரி நடிப்பில் கருடன் படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சூரி. படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ள சூழலில் இயக்குநர் துரை செந்தில்குமார் படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கருடன் பிரமோஷன்கள்: நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் சூரிக்கு தான் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஹீரோவாக நடிக்க ஒரு கதையை கூறியதாகவும் ஆனால் அவர் அப்போது அந்த படத்தில் நடிக்க நம்பிக்கை இல்லாமல், போங்க தம்பி என்று தான் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கருடன் படத்தின் ப்ரோமோஷன்களில் இணைந்து பேட்டி அளித்துள்ள சூரி, சிவகார்த்திகேயன் அப்படி ஒரு கதையை தன்னிடம் கூறியது உண்மைதான் என்றும் தனக்கு மிகவும் பொருத்தமான கதையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க தயார்: இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கினால் நடிப்பதற்கு தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் தனது மேலும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் சூரி பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூரி இணைந்து நடித்து வருகிறார். இதேபோல சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிவரும் கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. விரைவில் சிவகார்த்திகேயன் இயக்கத்திலும் அவர் இணைவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











