Soori: விரைவில் இயக்குநராவேன்.. அடம்பிடிக்கும் சூரி.. அவர் இயக்கவிருக்கிற கேரக்டர்ஸ் யாரு தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை சூரிக்கு பெற்று தந்தது. இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் 2வது பாகம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தான் விரைவில் இயக்குநராக உள்ளதாக நடிகர் சூரி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர்கள் அடுத்தடுத்து தங்களது இயக்குநராகும் திறமையை வெளிப்படுத்தி வரும் சூழலில் அந்த பட்டியலில் தானும் இணையவுள்ளதாக சூரி கூறியுள்ளார்.

soori viduthalai 2 movie vetri maaran

நடிகர் சூரி: நடிகர் சூரி காமெடியனாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டியில் துவங்கிய நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இவர் சிறப்பாக்கி இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக களமிறங்கினார் சூரி. இந்த படம் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். கொட்டுக்காளி, கருடன் என அடுத்தடுத்த படங்கள் சூரி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ளன.

ஹீரோவாக சூரி: இந்நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி அதிரடி காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் காட்டுக்குள் நடக்கும் ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமில்லாமல் பவானிஸ்ரீ உடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள விடுதலை 2 படத்திலும் சூரி இந்த கேரக்டரை தொடர்ந்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

விடுதலை 2 படம்: விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கேரக்டரில் அதிரடி காட்டியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி தான் விரைவில் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய அப்பா மற்றும் அம்மா ஆகியோரின் புகைப்படங்களை காட்டி பேசிய சூரி, அவர்களின் வாழ்க்கையை தான் படமாக இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநராகும் சூரி: தன்னுடைய அப்பா முத்துச்சாமி மற்றும் அம்மா செங்கை அரசி குறித்த மகிழ்ச்சி நினைவுகளை சூரி பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்களின் வாழ்க்கையை தான் கண்டிப்பாக படமாக இயக்குவேன் என்றும் சூரி உறுதி தெரிவித்துள்ளார். கூறும்போது சாதாரணமாக தெரியும் என்றும் ஆனால் அதிகமான விஷயங்கள் ஷேர் செய்வதற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பா தற்போது தவறிவிட்டதாகவும் ஆனால் வாழ்க்கையில் பொறுமையாக இருந்து சினிமாவில் முன்னுக்கு வந்ததற்கு அவர்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். அவர் அடிக்கடி தன்னை சிங்கக்குட்டி என்று கூறுவார் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X