Soori: காலை முதல் மாலை வரையிலான ட்ராவல்.. கொட்டுக்காளி சீக்ரெட் சொன்ன சூரி!

சென்னை: நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள மூன்றாவது படம் கொட்டுக்காளி. முன்னதாக கூழாங்கல் என்ற சர்வதேச தரத்திலான படத்தை இயக்கியிருந்த பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொட்டுக்காளி படம். படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நடிகர் சூரி, அன்னா பென், இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Soori Kottukkaali movie

நடிகர் சூரி: காமெடியனாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய நடிகர் சூரி, தற்போது ஹீரோவாகியுள்ளார். கடந்த ஆண்டில் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் சூரி அதகளம் செய்திருந்தார். இந்த படம் நாயகனாக அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து நாயகனாகவே அவர் களமிறங்கி நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் கூட்டணியில் வெளியான கருடன் படமும் ஹீரோவாக சூரிக்கு மிகச் சிறப்பான வகையில் கை கொடுத்திருந்தது.

கொட்டுக்காளி படம்: இந்நிலையில் வரும் 23ம் தேதி சூரியின் அடுத்த நாயகன் அவதாரமாக கொட்டுக்காளி படம் ரிலீசாக உள்ளது. முன்னதாக கூழாங்கல் என்ற சிறப்பான படத்தை கொடுத்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். படத்தை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

கொட்டுக்காளி பட பிரமோஷன்கள்: இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்து அன்னா பென், வினோத் ராஜ் மற்றும் சூரி ஆகியோர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகர் சூரி, இந்தப் படம் காலை முதல் மாலை வரை நடக்கும் பயணங்களின் கோர்வையாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பயணம் டெரரான பயணமாக அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் 15 நிமிடங்கள் ஸ்லோவாக இருப்பதாக தெரியும், இதுதான் இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைல் என்றும் சூரி கூறியுள்ளார்.

Soori Kottukkaali movie

வித்தியாசமான அனுபவம்: எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கொட்டுக்காளி படத்தை பார்க்க வந்தால் படம் மிகச் சிறப்பான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் சூரி தெரிவித்துள்ளார். மற்ற படங்களை போல எதிர்பார்த்து கொட்டுக்காளி படத்தை பார்க்க வரவேண்டாம் எறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற படங்கள் கொடுக்காத அனுபவத்தைதான் கொட்டுக்காளி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X