30 கோடியப்பு.. சூரிக்கு கிடைத்த சூறாவளி ஹிட்.. கருடன் வெற்றிக்காக வீடியோ வெளியிட்டு உருக்கம்!

சென்னை: நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் தமிழ்நாட்டில் 27.5 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த வாரமும் கருடன் படம் தான் திரையரங்குகளில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கருடன் படத்துக்கு கொடுத்த வரவேற்புக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து நடிகர் சூரி உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர்கள் ஹீரோக்களாக நாகேஷ் காலத்தில் இருந்தே மாறி வருகின்றனர். பல நல்ல படங்களையும் கொடுத்து வருகின்றனர். கவுண்டமணியால் ஹீரோவாக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. ஆனால், வடிவேலு இம்சை அரசன் எனும் மிகப்பெரிய வெற்றியை ஹீரோவாக நடித்து கொடுத்தார்.

soori garudan box office viduthalai 2 kottukaali

சந்தானம் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தில்லுக்கு துட்டு சீரிஸ் அவருக்கு கை மேல் துட்டுக்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. யோகி பாபு காமெடி ஹீரோவாக நடிக்கும் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அவர் நடித்த மண்டேலா திரைப்படம் ஒரு மாணிக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹீரோவான சூரி: குக் வித் கோமாளி புகழ் கூட ஜூ கீப்பர் படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். பரோட்டா சூரியாக கொண்டாடப்பட்டு வந்த சூரி கடந்த ஆண்டு ஹீரோவாக முடிவெடுத்து விட்டால் பிராப்பராக பெரிய இயக்குநர் படத்தில் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் நடிக்க கத்துக்கிடணும் என நினைத்து வெற்றிமாறன் பட்டறையில் இணைந்து விடுதலை படத்தில் நடித்து சிறந்த நடிகராக மாறியுள்ளார். விடுதலை 2ம் பாகம் வருவதற்கு முன்னதாக கருடன் படத்தின் மூலம் தற்போது கமர்ஷியல் வெற்றியையும் சூரி பெற்றுள்ளது சூப்பர்.

35 கோடி வசூல்: கருடன் திரைப்படம் தமிழ்நாட்டிலேயே 30 கோடியை நெருங்கி வரும் நிலையில், உலகளவில் 35 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. கடந்த வாரம் வெளியான கருடன் படத்தை எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என சிவகார்த்திகேயனை வைத்தும் கொடி மற்றும் பட்டாஸ் என தனுஷை வைத்தும் இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கி இருந்தார். சூரியுடன் சேர்த்து மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இருவரை இணைத்துக் கொண்டு 3 ஹீரோ சப்ஜெக்டாக படத்தை கொடுத்து பட்டையை கிளப்பி விட்டார்.

சூரி நன்றி: கடந்த ஒரு வார காலமாக சென்னையில் மட்டுமின்றி பட்டித் தொட்டி என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு சென்று சூரி நடித்துள்ள கருடன் படத்தை பார்த்து வருகின்றனர். இந்த ஒரு வார காலத்தை தனது வாழ்நாளிலேயே மறக்க மாட்டேன் என சூரி உருக்கமாக பேசி மக்களுக்கும் இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சூரி நீங்க எங்கேயோ போயிட்டீங்க: அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ நடித்துள்ள விடுதலை 2 படமும் இந்த ஆண்டே வெளியாகி சூரியின் மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்தி விடும் என தெரிகிறது. தொடர்ந்து இயக்குநர்களையும் கதைகளையும் சூரி தேர்வு செய்வதில் தான் அவருக்கு வெற்றிகள் குவிந்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X