முதல்முறையாக ஜீவராசிக்கு குரல்... சூரி பெருமிதம்... ட்ரெயிலரும் வெளியீடு

சென்னை : காமெடி நடிகர் சூரி, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ட்விட்டரில் பரபரப்பாக செயல்பட்டுவரும் இவர் சமூக நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அன்புள்ள கில்லி என்ற படத்தின் ட்ரெயிலரை அவர் ரிலீஸ் செய்துள்ளார்.

விடுதலை சூட்டிங்

விடுதலை சூட்டிங்

காமெடி நடிகர் சூரி பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்துவந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்.

பரபரப்புடன் செயல்படும் சூரி

பரபரப்புடன் செயல்படும் சூரி

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் அவர் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். மேலும் பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் இணைந்து புறாக்களின் வாழ்க்கை குறித்த வீடியோவை உருவாக்கி அதை பகிர்ந்திருந்தார்.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

அந்த வீடியோ சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அன்புள்ள கில்லி என்ற படத்தின் ட்ரெயிலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் கில்லியாக வரும் நாய்க்குட்டிக்கு சூரி பின்னணி கொடுத்துள்ளார்.

படக்குழுவிற்கு வாழ்த்து

படக்குழுவிற்கு வாழ்த்து

இந்தபடத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ள அவர், முதல் முறையாக ஒரு ஜீவராசிக்கு குரல் கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இத்தகைய புது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். அந்த படத்தின் ட்ரெயிலரில் நாய்க்குட்டியின் அட்டகாசங்கள் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X