நடிகர் சூரி வீட்டுக்கு குட்டிப் பாப்பாஸ் வந்தாச்சு... சந்தோஷமா வீடியோ வெளியிட்ட சூரி

சென்னை : கோலிவுட்டின் காமெடி ஹீரோ நடிகர் சூரி. காமெடியில் மட்டுமின்றி பல்வேறு சமூக நிகழ்வுகளிலும் தன்னை அவர் சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு புதிதாக வந்துள்ள குட்டி பாப்பாக்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டைமிங் காமெடி

டைமிங் காமெடி

கோலிவுட்டின் காமெடி ஹீரோவாக மாறியுள்ளார் நடிகர் சூரி. தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தொடர்ந்து இவருடைய காமெடிக்காக ஓடும் படங்களும் அதிகமாக உள்ளன. காமெடி ஹீரோவாகவும் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படத்தில் அவர் நடித்து வருகிறார்.

சமூக விழிப்புணர்வு

சமூக விழிப்புணர்வு

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின்மூலம் பல்வேறு சமூக நிகழ்வுகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார் சூரி.

வெல்கம் குட்டி பாப்பா

வெல்கம் குட்டி பாப்பா

இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வெல்கம் குட்டி பாப்பா என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை அவர் டேக் செய்துள்ளார். இந்த வீடியோவின் துவக்கத்தில் குட்டி பாப்பா எப்போ வரும் என்று அவருடைய குழந்தைகள் கேட்பது போல அமைந்துள்ளது வேறு மாதிரியான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

புறா போட்ட குட்டிகள்

புறா போட்ட குட்டிகள்

ஆனால் தொடர்ந்து குட்டி பாப்பா இரட்டையாக பிறந்துள்ளதாக வீடியோ போகிறது. பார்த்தால் அவர்கள் வீட்டில் புறா இரட்டை குட்டிகளை போட்டுள்ளதை குடும்பமே சேர்ந்து கொண்டாடுகிறது. அதற்கு இரை போடுவது உள்ளிட்டவற்றை அவரது குழந்தைகள் சேர்ந்து செய்வதாக வீடியோ போகிறது.

ஆக்ஸிஜனுக்கு திண்டாட்டம்

ஆக்ஸிஜனுக்கு திண்டாட்டம்

தொடர்ந்து அதிகமான மரங்களை வெட்டி சாய்த்ததால் தற்போது ஆக்சிஜனுக்கு நாட்டு மக்கள் திண்டாடுவதாக அவரது மகள் போகிற போக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். தொடர்ந்து வீடியோவின் இறுதியில் பேசும் நடிகர் சூரி, இந்த உலகம் நமக்கானது மட்டும் இல்லை என்றும் எல்லா உயிர்களுக்கானதும்தான் என்றும் சொல்லி முடிக்கிறார். மொத்தத்தில் அனைவரையும் கவரும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X