Soori - சூரி செய்த சாகசத்தை பாருங்க - இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோவை

சென்னை: Soori (சூரி) காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக வளர்ந்திருக்கும் சூரி செய்த சாகச வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சூரி சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தார். எல்லோரையும் படுத்தும் சினிமா சூரியை கொஞ்சம் அதிகமாகவே படுத்தியது. இருந்தாலும் சினிமா மீது இருக்கும் காதலால் சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும் செய்ய ஆரம்பித்தார் சூரி. அவரைப் பொறுத்தவரை சினிமாவுக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்று செய்துகொண்டிருந்தால் சினிமா கைவிடாது என்பது நம்பிக்கை.

Actor Sooris adventurous video has trended on the internet

திரையில் சூரி: செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.

முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.

Actor Sooris adventurous video has trended on the internet

விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருக்கும் சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ரொம்பவே கஷ்டப்பட்டு இப்போது வளர்ந்திருக்கும் சூரி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கை சந்தித்தார். அப்போது உங்களது படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன் என சேவாக் சூரியிடம் கூறும் வீடியோ ட்ரெண்டானது.

சூரியின் சாகசம்: இந்நிலையில் நடிகர் சூரி இலங்கைக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள பிரபலமான சிப் லைனில் சாகச பயணம் மேற்கொண்ட சூரி அதனை செல்ஃபி ஸ்டிக் கொண்டு படம் எடுத்தபடி செல்கிறார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், "உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு - இவற்றை பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X