‘’ஆலமரத்தை இழந்த நாள் இன்று’’… ட்விட்டரில் உருகிய சூரி !
சென்னை : நடிகர் சூரி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அசுரன் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்
இந்த திரைப்படத்தில், விஜய்சேதுபதி, சூரி,பவானி ஸ்ரீ , கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

சூரி
நகைச்சுவை நடிகரான சூரி, அஜித், விஜய்,ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரி, விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் சூரி. அதற்காக கடுமையாக உழைத்து தனது உடலை சிக்கென சிக்ஸ் பேக்காக மாற்றி உள்ளார் சூரி.

ஃபர்ஸ்ட்லுக்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. அந்த போஸ்டரில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர். இந்த போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

வாடிவாசல்
விஜய்சேதுபதியின் தேதி கிடைக்காததால், விடுதலை திரைப்படம் இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது. இதனால், வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

உருக்கமான பதிவு
இந்நிலையில், நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று, மீசை வைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள்.. அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











