ஆத்தா மதுரை மீனாட்சியை மனசார வேண்டிக்கிறேன்.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய நடிகர் சூரி பிரார்த்தனை

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சார் விரைவில் குணமடைய மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்வதாக நடிகர் சூரி உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

பாடகர் SPB விரைவில் குணம் பெற வேண்டும் என பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!

கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயற்கை சுவாச கருவியின் உதவியோடு அவர் இயங்கி வருவதாகவும் மருத்துவமனை அறிவித்து இருந்தது.

தொடரும் பிரார்த்தனை

தொடரும் பிரார்த்தனை

தமிழ் மக்களின் சுக துக்கங்கள் என எதுவாக இருந்தாலும், அங்கே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். தனது மாயக் குரலால் பல கோடி மக்களை மயக்கி வைத்திருக்கும் அவருக்கு இப்படியொரு நிலைமை வந்த விவரம் அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும், மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஒரே நிலையில்

ஒரே நிலையில்

எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடையாமல் அப்படியே ஒரே நிலையில், இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, வைரமுத்து, பார்த்திபன் என பல பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைண்டு வீடு திரும்ப வேண்டும் என உருக்கமாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

ஒரு நாளும் கடந்தது இல்ல

ஒரு நாளும் கடந்தது இல்ல

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து நகைச்சுவை நடிகர் சூரி ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். "எஸ்.பி.பி. சார், விவரம் தெரிஞ்சு உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாள கூட கடந்ததில்ல.. விடியக்கால நடந்தாலும் சரி.. வீட்ல விஷேசம்னாலும் சரி.. தாலாட்டி எங்களை தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக் கொடுத்து எங்களை ஓட வைக்கிறதும் சரி.. எப்பவுமே உங்க பாட்டுத்தான்!

ஆத்தா மதுரை மீனாட்சி காப்பாத்துவா

ஆத்தா மதுரை மீனாட்சி காப்பாத்துவா

எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட.. நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடணும். உங்க குரல கேட்டுகிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும்ன்னு.. ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் நிச்சயம் அவர் நலமுடன் திரும்பி வருவார் என்றே நம்புகிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X