நடிகர் சூரி வீட்டு திருமணத்தில் திருட்டு... காட்டிக்கொடுத்த சிசிடிவி.. துரிதமாக செயல்பட்ட போலீசார் !
மதுரை : நடிகர் சூரியின் உறவினர் திருமண விழாவில் காணாமல் போன நகையை போலீசார் விரைவாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.
திருமணவிழாவில் மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய மர்மநபர் நகையை திருடியது தெரியவந்தது இதையடுத்து, அவரை கைது செய்து அவரிடமிருந்த நகைகளை மீட்டனர்.

சூரியின் அண்ணன் மகள்
நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் சுஷ்மிதாவின் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்றது.

ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் சூரியன் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ் மற்றும் சீமான் என தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சில பிரமுகர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நகை திருட்டு
இந்த நிலையில் மணமகளின் உறவினர் மணமகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகையை மணமகள் அறையில் இருந்து மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சிசிடிவி கேமராவில்
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கும் இங்கும் சுற்றி வருவது பதிவாகி இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் அவர் நகை திருடியது தெரியவந்தது.

நகை மீட்டனர்
அதனை தொடர்ந்து பரமக்குடியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டு மதுரை அழைத்து வந்தனர். மேலும் இவர் மீது மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பதினெட்டிற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி
போலீசார் விரைவாக செயல்பட்டு நகையை மீட்டு கொடுத்ததற்கு சூரியின் அண்ணன் முத்துராமலிங்கம் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கல்யாண மண்டபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் வந்த போது அனைவரும் அவர்களை பார்க்க மேடைக்கு வந்துள்ளனர். இதுதான் சாக்கு என்று, இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், தனது கைவசத்தை காட்டி உள்ளார். இறுதியில் வீடியோ கேமராவில் பதிவான காட்சியால் அவனை கீரைத்துறை காவல்துறையினர் அலெக்காக தூக்கி உள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில்
நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்காக காட்டுத்தனமாக உடற்பயிற்சி உழைத்து சும்மா உடலை முறுக்கேற்றி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்டபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











