சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘’விடுதலை’’… விறுவிறுப்பான இறுதிகட்ட படப்பிடிப்பில்!

சென்னை : சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விஜய்சேதுபதி, சூரி,பவானி ஸ்ரீ , கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக உள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

பொல்லாதவன், ஆடுகுளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவருடைய திரைப்படங்களுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.

கதாநாயகனாக

கதாநாயகனாக

இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் சூரி. அதற்காக கடுமையாக உழைத்து தனது உடலை சிக்கென சிக்ஸ் பேக் வரை மாற்றி உள்ளார் சூரி.

வரவேற்பை பெற்றது

வரவேற்பை பெற்றது

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் சூரி கான்ஸ்டபிள் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர். இந்த போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

Recommended Video

Adukalam படத்தில் Trisha நடிக்க மறுத்த காரணம் இதுதான் | Vetrimaran Exclusive | Filmibeat Tamil
விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

விடுதலை படத்தை முடித்த கையோடு நீண்ட நாட்களாக அறிவிப்பில் இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தொடங்க உள்ளார் வெற்றிமாறன். இந்தபடத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் கமலை வைதது ஒரு புதிய படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதகவும் இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X